"அன்பு தான் எல்லாமே".. உணவு டெலிவரி ஊழியருடன் பைக்கில் இருந்த பெண்.. இணையவாசிகளை மனம் உருக வைத்த வீடியோ!!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாம் சோஷியல் மீடியாவில் நிறைய நேரம் உலவிடும் போது நம்மைச் சுற்றி நடக்கும் ஏராளாமான விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.

அது மட்டுமில்லாமல், அதிர்ச்சிகரமான, வினோதமான அல்லது மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையில் என வகை வகையாக வீடியோக்கள் மற்றும் செய்திகள் நிறைய வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.
இதில் மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையில் இருக்கும் விஷயங்களை நாம் பார்க்கும் போது, உடனடியாக கடந்து செல்ல முடியாமல் மனதில் ஒருவித தாக்கத்தையும் உருவாக்கி விட்டு கடந்து செல்லும். இப்படிப்பட்ட வீடியோக்களில் வரும் சாதாரண மனிதர்கள் கூட ஒரு ஹீரோவாக மக்கள் மத்தியில் மாறுவார்கள். இந்த நிலையில் அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் மனம் உருக வைத்து வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல நகரப் பகுதிகளில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையில் ஏராளமான மக்கள் உணவு டெலிவரி ஊழியர்களாகவும் இரவு பகல் பாராமல் ஓடி ஓடி வேலை செய்து வருகின்றனர். நேரத்துக்கு வாடிக்கையாளர்களுக்கு உணவை கொண்டு சேர்க்க மிகவும் கடுமையாக உழைக்கவும் செய்கின்றனர்.
அப்படி ஒரு சூழலில், டிராபிக்கில் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் பைக்கில் காத்திருக்க அவர் பின்னால் இருக்கும் பெண் ஒருவர், கையில் அந்த உணவு டெலிவரி ஊழியரின் பேக்கை வைத்தபடி உட்கார்ந்திருக்கிறார். தனியாக ஊழியர்கள் வேலை செய்யும் அதே வேளையில் பெண் ஒருவர், அவருக்கு துணையாக இருந்து அந்த பேக்கை தனது கையில் வைத்துக் கொண்டு பயணம் மேற்கொண்டது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.
அந்தப் பெண் அவருடைய நண்பரா அல்லது குடும்பத்தில் ஒருவரா என்பது சரிவர தெரியாத நிலையில், யாராக இருந்தாலும் மற்றவர்களின் கூட இருந்து உதவி செய்வது என்ற விஷயம் தான் இணையவாசிகள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.

மற்ற செய்திகள்
