நள்ளிரவில்.. வாசலில் தோன்றிய இளம்பெண் உருவம்.. வீடியோவை வாலிபர் பகிர்ந்ததும்.. போனில் பெண் சொன்ன விஷயம்.. கேட்டதும் அள்ளு விட்டுருச்சு!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Dec 16, 2022 12:30 PM

தனது வீட்டு வாசலில் இளம்பெண் ஒருவர் வந்து நின்றிருந்த நிலையில், அதன் பின்னர் தெரிய வந்த விஷயம் கடும் பதற்றத்தை உண்டு பண்ணி உள்ளது.

Man finds woman stand in front of his door video surfaces

Also Read | "சில பாட்டு இப்டி நம்மள Vibe ஆக்கும்".. பிரதீப் குமார் பாட்டை கேட்டு மெய்மறந்து பாடிய காவலர்.. அவரோட ரியாக்ஷன் தான் இப்ப Trending!!

இங்கிலாந்தை சேர்ந்த வாலிபர் ராப் வில்லியம்ஸ் (Rob Williams). தனது வீட்டு வாசலில் கேமரா பொருத்தி வைத்துள்ள நிலையில், அங்கே நடைபெறும் காட்சிகளை தனது மொபைல் மூலம் பார்க்கும் வசதியும் அவர் ஏற்படுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. வீட்டின் முன்பு யாரேனும் அசைவது தெரிந்தால் உடனடியாக ராப் மொபைலுக்கு நோட்டிபிக்கேஷன் வரும் என்றும் தெரிகிறது.

அப்படி ஒரு சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது வாசலில் யாரோ நிற்பதாக இரவு நேரத்தில் ராப் மொபைலில் நோட்டிபிகேஷன் வர, அதனை எடுத்து பார்த்த போது கேமரா வழியாக பெண் போன்ற ஒரு உருவம் வாசலில் நிற்பதையும் அவர்  கவனித்துள்ளார். அந்த பெண் சுமார் 20 வினாடிகளில் மறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் இதனால் பயந்து போன ராப் வில்லியம்ஸ், அன்று இரவு முழுவதும் வீட்டில் லைட்டுகளை அணைக்காமலே படுக்கைக்கு சென்று தூங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ காட்சிகளை தொடர்ந்து பல முறை பார்த்து கொண்டே இருந்த ராப் வில்லியம்ஸ், வினோதமாக ஒரு உருவம் தோன்றியதை அறிந்து பதறியும் போனார். இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் ராப் வில்லியம்ஸ் பகிர, இதனை பார்த்த பலரும் பலவிதமான கருத்துகளையும் கூறி வந்தார்கள். அந்த சமயத்தில் அவரைத் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் போன் வழியாக சொன்ன விஷயம் அவரை இன்னும் திகைப்படைய வைத்துள்ளது.

Man finds woman stand in front of his door video surfaces

அந்த பெண் ஆவிகளுடன் பேசும் நபர் என தன்னை ராப் வில்லியம்ஸிடம் அறிமுகப்படுத்தி இருந்த நிலையில், கேமராவில் ராப் பார்த்த பெண்ணின் பெயர் ஹெலன் என்றும் அவர் ஒரு செவிலியராக ராப் வீட்டிற்கு அருகே உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததாகவும் அந்த பெண் கூறி உள்ளார். நோய் வாய்ப்பட்டு இறந்து போன அந்த செவிலியர் நல்ல ஆவி என்றும், அவர் எந்த தொந்தரவும் செய்ய வேண்டிய நோக்கில் ராப் வீட்டின் வாசலில் வந்து நிற்கவில்லை என்றும் ஆவிகளிடம் பேசுவதாக அறிமுகம் செய்த பெண், ராப் வில்லியம்ஸிடம் கூறி உள்ளார்.

இந்த சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் அதிக பதற்றத்தை உருவாக்கி வரும் வேளையில், இது ஆவியாக இருக்காது என்று எதாவது லைட்டின் Reflection ஆக கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | போலீஸ் தேர்வுக்கு வந்த பெண்.. தலைக்குள் ரகசிய அறையா?.. போலீசையே அதிர வைத்த சம்பவம்!!..

Tags : #MAN #WOMAN #DOOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man finds woman stand in front of his door video surfaces | World News.