"அட, இந்தாங்க சாவிய புடிங்க".. காரை போட்டோ எடுத்த இளைஞருக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Dec 22, 2022 02:44 PM

அவ்வப்போது இணையத்தில் நாம் நேரம் உலவிடும் போது நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும் முடியும்.

Two youth wanted to take photo with car owner helps them

Also Read | தனக்கு தானே கொரோனா வர வைத்த பிரபல பாடகி?.. எதுக்காக தெரியுமா?.. பீதியை உண்டு பண்ணிய தகவல்!!

அது மட்டுமில்லாமல், இன்னொரு பக்கம் தினந்தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரல் ஆவதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படி வைரலாகி வரும் வீடியோக்கள் அதிர்ச்சி நிறைந்ததாக, மனம் நெகிழ வைக்கக் கூடிய வகையிலும், வினோதமாகவும் என வித விதமாகவும் இருக்கும்.

அப்படி சில வீடியோக்களை நாம் பார்க்கும் போது உடனடியாக அது மனதில் இருந்து விலகாமல் ஒருவித தாக்கத்தை உண்டு பண்ணி விட்டு தான் கடந்து செல்லும்.

அந்த வகையில் ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பார்ப்போர் பலரையும் மனம் நெகிழ வைத்து வருகிறது. பொதுவாக, சாலை ஓரத்தில் வித்தியாசமான் தோற்றத்தில் கார் அல்லது பைக்குகள் நிற்கும் போது அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள பலரும் விரும்புவார்கள். ஒரு பக்கம் அந்த வாகனத்தை இயக்க விரும்பினாலும், அதன் அருகே புகைப்படம் எடுத்துக் கொள்வதுடன் சிலர் மனம் நிறைவு கொள்வார்கள்.

Two youth wanted to take photo with car owner helps them

இந்த நிலையில், வாலிபர்கள் இரண்டு பேர் கார் ஒன்றின் அருகே நின்று புகைப்படம் எடுக்க, அதன் பின்னர் நடந்த சம்பவம் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இது தொடர்பாக வெளியான வீடியோவின் படி இளைஞர்கள் இரண்டு பேர் ஸ்போர்ட்ஸ் காராக மாற்றி அமைக்கப்பட்ட ஸ்விஃப்ட் காரை பார்த்ததும் அசந்து போய் அதன் முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொள்ள நினைத்ததாகவும் தெரிகிறது. இதனை காரின் உரிமையாளர் சிசிடிவி மூலம் முதலில் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து சாலையோரம் பார்க் செய்யப்பட்டிருந்த தனது காருக்கு அருகே சென்று அந்த இளைஞர்களிடம் பேச்சு கொடுத்த நிலையில் போட்டோ எடுத்துக் கொள்ளவும் அவர்களை அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Two youth wanted to take photo with car owner helps them

அது மட்டுமில்லாமல், கார் சாவியை கொடுத்து காருக்குள் இருந்து வெளியே வரும் வகையில் வீடியோவை எடுத்து அந்த இளைஞர்களை கார் உரிமையாளர் மகிழ செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. கார் ஓனரின் செயலால் பூரித்துப்போன இளைஞர்களில் ஒருவர் இது குறித்து பேசுகையில், உங்கள் காரை பார்ப்பதற்காக தினமும் இந்த வழியே வருவோம் என்றும் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது என்றும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை அன்ஷு பத்ரா என்பவர் பகிர்ந்துள்ள நிலையில், சுமார் 35 மில்லியன்களுக்கு மேல் பார்வையாளர்களைக் கடந்து பலரையும் மனம் உருக வைத்து வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை கண்டு கார் ஓனரை பாராட்டியும் வரவேற்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Also Read | தோனி கையெழுத்து மேல் ஆட்டோகிராப் கேட்ட ரசிகர்.. இஷான் கிஷன் சொன்ன வைரல் பதில்.. Trending வீடியோ!!

Tags : #YOUTH #PHOTO #CAR #CAR OWNER #HELP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Two youth wanted to take photo with car owner helps them | India News.