"வெளிய போனதும் விக்ரமனுக்கு கல்யாணமா?".. பொண்ணோட வந்துருவாருன்னு கத்திய ஷிவின்.. விக்ரமன் தாய் கொடுத்த ரியாக்ஷன்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.

Also Read | ஆந்திராவில் அதிர்ச்சி.! கூட்ட நெரிசலில் மக்கள் பலி.. ரூ. 10 லட்சம் நிதி அறிவித்து சந்திரபாபு நாயுடு இரங்கல்
இதற்கு அடுத்தபடியாக, தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.
அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.
மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.
அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்த வண்ணம் இருப்பதால், பிக் பாஸ் வீடே தற்போது எமோஷனல் மோடிற்கு மாறி உள்ளது.
இந்த நிலையில், விக்ரமனின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் வந்த போது போட்டியாளர்களிடையே நடந்த உரையாடல் பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது.
அனைத்து போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு தனித்துவம் இருப்பதாக விக்ரமனின் தந்தை குறிப்பிட, ஏடிகேவின் உடல்நலம் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார் விக்ரமனின் தாயார். இதனைத் தொடர்ந்து, விக்ரமன் குறித்து பேசிய அவரது தந்தை, "அவருகிட்ட (விக்ரமன்) இருந்து நான் நிறைய கத்துக்கணும்ங்குறது தான் உண்மை" என கூறியதுடன் ஒரு பார்வையாளராக அவரை பார்ப்பதாகவும் கூறினார்.
இதற்கடுத்து, விக்ரமன் திருமணம் குறித்த பேச்சு எழ, வெளிய வந்ததும் திருமணமா என்றும் மணிகண்டா கேட்கின்றார். அப்போது பேசும் விக்ரமனின் தாயார், "நீங்க எல்லாம் எடுத்து சொல்லுங்க. சம்மதிக்க வெச்சுருங்க" என்றும் கூறுகிறார். "பொண்ணோட வருவாருமா கவலைப்படாதீங்க" என்று ஷிவின் ஜாலியாக சொல்ல, இதனை கேட்டதும் சிரித்துக் கொண்டே இருக்கிறார் தாயார். இதனைத் தொடர்ந்து முதல் ஆளாக திருமணத்திற்கு வந்து விடுவேன் என ஏடிகே கூறியபடி, மொய் மட்டும் எதிர்பாக்காதீர்கள் என்றும் தெரிவிக்கிறார்.
விக்ரமனின் பெற்றோர் வந்த போது போட்டியாளர்களுடன் நடந்த உரையாடல்கள் பார்வையாளர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

மற்ற செய்திகள்
