போலீஸ் தேர்வுக்கு வந்த பெண்.. தலைக்குள் ரகசிய அறையா?.. போலீசையே அதிர வைத்த சம்பவம்!!..
முகப்பு > செய்திகள் > இந்தியாகாவல்துறை தேர்வு எழுத வந்த பெண் ஒருவர், மோசடி ஒன்றில் ஈடுபட்டிருந்த நிலையில், இது குறித்து தெரிய வந்த விஷயம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாவட்டம், மஹபூப் நகர் என்னும் பகுதியில் சமீபத்தில சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிளுக்கான உடல் தகுதித் தேர்வு (Physical Endurance Examination) நடைபெற்றுள்ளது.
இந்த தேர்வுகளுக்காக ஏராளமானோர் தேர்வு முகாமில் கலந்து கொண்டுள்ளனர். அதே போல, இந்த தேர்வில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்றும் பலர் முனைப்பில் இருந்துள்ளனர்.
அப்படி ஒரு சூழலில் தான், தேர்வில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அங்கே வந்த பெண் ஒருவர் செய்த விஷயம், தற்போது அங்கிருந்த அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது. அங்கே வந்த பெண் ஒருவரின் உயரத்தை சோதனை செய்ய அவரை மின்னணு சாதனம் ஒன்றில் நிறுத்தி உள்ளனர். ஆனால், அவர் வந்து நின்றதும் அந்த கருவி வேலை செய்யவில்லை என்றும் தெரிகிறது.
இதனால், அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு சந்தகேம் எழவே, அங்கிருந்த பெண் போலீசார், பரீட்சைக்கு வந்த பெண்ணை சோதித்து பார்த்துள்ளனர். அப்போது தான் பெண் செய்த மோசடி வேலை குறித்து அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. தனது உயரத்தை அதிகமாகி காட்டுவதற்காக அந்த பெண், தனது தலையில் M Seal மெழுகை ஒட்டி வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. ஒரு வேளை அந்த மின்னணு கருவி இல்லை என்றால், அந்த பெண் தகுதி பெற்றிருப்பார் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
போலீஸ் தேர்வில் தகுதி பெற இப்படி ஒரு மோசடி வேலையில் பெண் ஒருவர் ஈடுபட்டதால் அவரை தகுதி நீக்கம் செய்து சீனியர் போலீஸ் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
