"அவரோட BUS ஓட்டுற ஸ்டைல் தான்"... 50 வயது டிரைவர் மீது காதலில் விழுந்த 24 வயது பெண்.. கடைசியில நடந்த ட்விஸ்ட்.!!!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக இரு நபர்களுக்கு இடையே உருவாகும் காதல் என்பது பணம், ஜாதி, மதம், வயது, அந்தஸ்து உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டுவதில் தான் உருவாகும் என பலரும் கூறுவார்கள்.

இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு காதல் தொடர்பான செய்தி தான், இணையத்தில் வெளியாகி பலரது மத்தியில் வைரல் ஆகியும் வருகிறது.
அவ்வப்போது நாம் சமூக வலைத்தளத்தில் வலம் வரும் போது, பெரிய அளவில் வயது வித்தியாசம் இருந்தும் ஒருவரை ஒருவர் விரும்பி, திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது குறித்து நிறைய கேள்விப்படுவோம். அப்படி வயது, வித்தியாசம் பார்க்காமல் தான் ஒரு காதல் பாகிஸ்தானில் அரங்கேறி உள்ளது.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் சையது பாசித் அலி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியாகி உள்ள தகவல்களின் படி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில், பேருந்து ஓட்டுநராக இருப்பவர் சாதிக். அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் சேஷாதி. சன்னு என்னும் பகுதி முதல் லாகூர் வரை பேருந்து ஓட்டி வந்துள்ளார் சாதிக். அதே பேருந்தில், சேஷாதியும் அடிக்கடி பயணம் மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அந்த சமயத்தில், சாதிக் மற்றும் சேஷாதி ஆகியோருக்கு இடையே பழக்கமும் உருவாகி உள்ளது. இதனையடுத்து, நாளடைவில் இருவரும் காதலிக்கவும் தொடங்கி உள்ளனர். சாதிக்கிற்கு 50 வயதாகும் நிலையில், சேஷாதிக்கு 24 வயது ஆவதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 26 வயது இடைவெளியை அவர்கள் பெரிய அளவில் பொருட்படுத்தாமல், ஒருவருக்கு ஒருவர் காதலித்ததுடன் திருமணமும் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
பேருந்தில் சாதிக் போடும் பழைய பாடல்கள் முதலில் தன்னை ஈர்த்ததாக குறிப்பிடும் சேஷாதி, அதன் பின்னர் அவர் பேருந்து ஓட்டும் அழகிற்கும், அவர் பேசும் ஸ்டைலுக்கும் அதிகம் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஒருவருக்கு ஒருவர் பேசும் சமயத்தில் காதலும் அவர்களுக்கு இடையே உருவான நிலையில், முதலில் காதலை சாதிக்கிடம் வெளிப்படுத்தி உள்ளார் சேஷாதி.
காதலித்து தற்போது திருமணமும் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இந்த ஜோடி குறித்த தகவல், இணையத்தில் அதிகம் வைரலாகியும் வருகிறது.

மற்ற செய்திகள்
