காதல் விவகாரத்தை தட்டிக் கேட்ட மனைவிக்கு கணவரின் காதலி கொடுத்த தண்டனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 01, 2019 06:16 PM

கணவரின் தகாத உறவை தட்டிக்கேட்ட மனைவிக்கு கணவரின் காதலி கொடுத்துள்ள கொடூரமான தண்டனை சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TamilNadu - Husband and his Lover murders wife and both arrested

சேலம் மாவட்டத்தில் உள்ளது ஓமலூர். இங்குள்ள பாலிகடை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னபையன். சின்னபையனுக்கும் லட்சுமிக்கும் திருமணமாகி வருடக் கணக்காகிய நிலையில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சின்னபையனின் மனைவி லட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் லட்சுமி சுமார் 7 சவரன் நகைகள அணிந்திருந்ததாகவும், ஆனால் இறக்கும் தருவாயில் அவர் அணிந்திருந்த அணிகலன்கள் எதுவுமே காணவில்லை என்றும், திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்த லட்சுமியின் வழக்கை விசாரித்த போலீஸார், லட்சுமியின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதையும் மற்றும் லட்சுமி இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்திலும் துப்பு துலக்கினர்.

அப்போதுதான் லட்சுமியின் கணவர் சின்ன பையனுக்கும், அண்டை வீட்டில் உள்ள பச்சையம்மாளுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த உறவை தகாத உறவென்றுக் கூறி, லட்சுமி தன் கணவர் சின்னபையனையும் பச்சையம்மாளையும் கண்டித்துள்ளார்.

ஆனால் இதில் ஆத்திரம் கொண்ட பச்சையம்மாள் லட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மரப்பலகை கொண்டு லட்சுமியை பச்சையம்மாள் தாக்கியுள்ளதோடு, லட்சுமி அணிந்திருந்த தங்க நகைகளை, லட்சுமியின் கணவரான சின்ன பையனின் உதவியோடு பறித்துச் சென்றுள்ளார். இதை அறிந்த போலீஸார் இருவரையும் கைது செய்துள்ள்ளனர்.

Tags : #MURDER #BIZARRE