கணவருடன் சேர்ந்து வாழாத ‘அக்கா’.. உடன்பிறந்த ‘தம்பி’ அளித்த கொடூர தண்டனை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 27, 2019 08:13 PM

நெல்லையில் உடன் பிறந்த அக்காவையே சகோதரர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Brother Kills his elder sister for not compromising with her husband

வாடகை வாகனத் தொழிலில் ஈடுபட்டு வந்த நெல்லை மாவட்டத்தின் ஏர்வாடியைச் சேர்ந்த லெனின் என்பவருக்கும் அதே நெல்லையின் வண்ணாரப்பேட்டையை பகுதியைச் சேர்ந்த, முதுகலை படிப்பு பயின்ற கனிமொழிக்கும் திருமணமாகி 1 , 1/2 மாதமே  ஆன நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு முளைத்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

படிப்பு நிலையில் இருவருக்கும் உள்ள வித்யாசத்தால் இந்த தகராறு உண்டானதாக கூறப்படும் நிலையில், கணவருடன் சண்டையிட்ட கனிமொழி அடிக்கடி தனது தாயார் வீட்டுக்குச் செல்வதும், அவர்கள் அவரை சமாதானப்படுத்தி கணவருடன் சேர்த்து வைப்பது வாடிக்கையாக இருந்துள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு பிறகும் இதே போல் கணவருடன் உண்டான தகராறினால் தாய் வீட்டுக்கு வந்த கனிமொழிக்கு அவரது பெற்றோர் மற்றும் தம்பி சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் ஆறுதல் கூறியதோடு, கணவருடன் சேர்ந்து வாழுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதற்கு உடன்படாத கனிமொழி தன் வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தம்பி சுந்தர பாண்டியன் தன் அக்கா தூங்கும்போது கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு தானாகவே சென்று
பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.  தன் அக்கா கணவருடன் வாழாமல் வீட்டுக்கு வந்ததால் தன் குடும்பத்தை பற்றியும், அக்காவை பற்றியும்  சுற்றத்தார் தவறாக பேசியதால் ஆத்திரமடைந்து இப்படி செய்ததாகவும் சுந்தர பாண்டியன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Tags : #TIRUNELVELI #CRIME #MURDER #BROTHER #SISTER