‘இருக்குற 9 நர்சுகளும் இப்படி இருந்தா என்னயா பண்றது?’: குழம்பித் தவிக்கும் மருத்துவமனை!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Mar 29, 2019 06:20 PM

அமெரிக்காவின் போர்ட்லேண்டில் உள்ளது பிரபல பெண்கள் மருத்துவமனை. இன்னும் சொல்லப் போனால் பெண்களின் பிரசவத்துக்காக மட்டுமே பிரத்யேகமாக இயங்கும் இந்த மருத்துவமனையில் நாளும் பிரசவத்துக்கான பெண்கள் பலர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு முழுநேர கண்காணிப்பில் வைக்கப்படுவர்.

9 staff nurses of a hospital are all pregnant at same time goes viral

கிட்டத்தட்ட கர்ப்பிணி பெண்களுக்கான ஒரு சேவையாகவே இதைச் செய்யும் இந்த மருத்துவமனையில் பிரசவத்துக்கென்று வரும் பல பெண்களையும் இங்கு பணிபுரியும் நர்சுகளையும் பிரித்து பார்ப்பதென்பதே அரிது. ஆனால் இந்த நர்சுகள் அனைவரும் சீருடையில் இருப்பதால் அது எளிதாக இருக்கிறது.

தவறிப்போய் எந்த நர்ஸாவது சீருடையில் வராமல் இருந்தால் அவ்வளவுதான், கர்ப்பிணி என நினைத்து அவரை மற்ற நர்சுகள் எல்லாம் பரிசோதனைகளை செய்ய தொடங்கிவிடுவார்கள் போல என்று எண்ணும் அளவுக்கு இங்கு ஒரு சம்பவம் இருக்கிறது. அதாவது இங்கு நெருக்கமான தோழிகளாக பணிபுரியும் 9 நர்சுகளுமே திருமணமானவர்கள்.

ஒரே நேரத்தில் 9 நர்சுகளுமே இப்படி கர்ப்பம் தரித்து ஏப்ரல்-ஜீலைக்கு இடையே குழந்தை பிறக்க வாய்ப்புள்ள நிலையில், அனைவரையும் அதே ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அனுமதிக்க அந்த மருத்துவமனை ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இந்த மகப்பேறு காலக்கட்டத்தில் இந்த நர்சுகளுக்கெல்லாம் விடுப்பு அளித்துவிட்டு யாரை வேலைக்கு எடுப்பது என குழம்பிப் போயுள்ளது இந்த மருத்துவமனை. இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #NURSES #HOSPITAL #VIRALPHOTO #BIZARRE #PREGNANT