‘பிரிந்து சென்ற மனைவி கோரிய வாழ்வாதார தொகை’: கோர்ட்டை அதிரவைத்த கணவரின் பதில்!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Siva Sankar | Apr 01, 2019 11:21 AM
மனைவிக்கு தர வேண்டிய வாழ்வாதாரத் தொகையை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தரவுள்ளதாக நபர் ஒருவர் கோர்ட்டில் கேட்டுள்ளது கோர்ட்டையே அதிரவைத்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்ந்த ஆனந்த் ஷர்மா என்பவருக்கும் தீப்மாலா என்கிற பெண்ணுக்கும் கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் நிகழ்ந்தது. இந்த தம்பதியினருக்கு ஆர்யா என்கிற பெண் குழந்தை இருக்கும் நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு காரணமாக கருத்து வேறுபாடுகள் எழுந்ததை அடுத்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால், மிக அண்மையில் ஆனந்த் ஷர்மாவின் மனைவி தீப்மாலா, தனது கணவரை பிரிந்து வாழ்வதால் தனக்கு வாழ சிரமமாக இருப்பதாகவும், கணவரையே நம்பி இருந்து தனது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறி, தனது மகளுக்கும் தனக்குமான வாழ்வாதாரத் தொகையினை தன் கணவர் வழங்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்தில் தீப் மாலா வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டும் மாதாமாதம் 4500 ரூபாய் தொகையை ஆனந்த் தன் மனைவிக்கு அளிக்க வேண்டும்
தொடர்ந்து பல நாட்களாக நிலுவையில் இருந்து வந்த இவ்வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது தன் மனைவி தொடர்ந்த வழக்கில், ஆனந்த் தன் சார்பில் தாக்கல் செய்த மனுவில் தான் வேலையின்றி இருப்பதாகவும் சினிமாவில் பணிபுரியும் தனக்கு போதிய வருமானம் இல்லாததாலும் கோர்ட்டாரின் உத்தரவை உடனே செயல்படுத்த முடியாததற்கு வருத்தப்படுவதாகவும், ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தன் மனைவியின் வங்கிக் கணக்கில் மாதம் 6000 ரூபாய் தன்னால் செலுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ், நாட்டில் உள்ள ஏழைகளுக்கு வருடத்துக்கு 72 ஆயிரம் உதவித் தொகையாக அளிக்கவுள்ளதாக தம்முடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததால் இத்தகைய காரணத்தை ஆனந்த் ஷர்மா கூறியிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்தான் மட்டுமே இதனை தன்னால் செய்ய முடியும் என அவர் கூறியிருப்பது அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.