‘சென்னையில் பைக்கை சரமாரியாக அடித்து நொறுக்கிய காவலர்’.. அதிர வைக்கும் காரணம்.. வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 31, 2019 07:34 PM

சென்னையில் சாலையோரமாக நின்ற இரு சக்கர வாகனத்தை காவலர் ஒருவர் அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Police broke the two wheeler on the roadside in chennai

சென்னை கிண்டி சத்யா நகரில் உள்ள பகுதியில் சாலை ஓரமாக இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து  வாகனத்தில் வந்த காவலர் ஒருவர், இரு சக்கர வாகனத்தை தடியால் அடித்து உடைத்தார். அப்போது அங்கு வந்த இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் எவ்விதவாக்குவாதத்திலும் ஈடுபடமால் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றார்.

காவலர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கும் போது உடனிருந்த காவல் உதவி ஆய்வாளர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மேலும் இது குறித்து தெரிவித்த போலிஸார், சம்பந்தப்பட்ட நபர் கல்லூரி மாணவர் என்றும், அவர் கஞ்சா வாங்க முயன்றதாகவும், பலமுறை கூறியும் போக மறித்ததால் அவரின் இரு சக்கர வாகனத்தை தாக்கியதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் வாகனம் சேதமடைந்தது குறித்து மாணவனின் பெற்றோர் கேட்டால் எப்படி பதில் கூற முடியும் என்பதால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #CHENNAI #POLICE #BIKE #BIZARRE