'முதல்வர் பிரச்சாரத்தில் பரபரப்பு'...எங்கிருந்தோ 'பறந்து வந்த செருப்பு'...அதிர்ச்சியில் தொண்டர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 01, 2019 10:25 AM

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கட்சியினரும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது.

Slipper has been thrown at Edappadi K. Palaniswami

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.அன்றைய தினமே 18 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.பன்னீர் செல்வம் ஆகியோர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதனிடையே தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியில் உள்ள மன்னார்குடி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய தொகுதிகளில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து,இரவு 9 மணிக்கு ஒரத்தநாட்டில் த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.அப்போது கூட்டத்தில் இருந்து பறந்த வந்த செருப்பு ஒன்று முதல்வர் நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது விழுந்தது.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக செருப்பு வீசிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.