‘நீங்க முன்னாடிப் போங்க எனக் கூறிய’... ‘திருமணமானப் பெண்ணுக்கு நடந்த கொடூரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 06, 2019 06:46 PM

திருமணமான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

a married woman who brutally murdered near kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே, காவித்தண்டலத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவர் தனியார் பள்ளி பேருந்தின், கிளீனராக வேலைப் பார்த்து வருகிறார். இவரது மனைவி 35 வயதான கோமதி. இவர்களுக்கு 13 மற்றும் 11 வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். வழக்கமாக கோமதி, அருகில் உள்ள காப்புக் காட்டிற்கு அடுப்பெரிப்பதற்காக விறகு வெட்ட செல்வார். அவருடன் கூடவே 3 பெண்களும் விறகு வெட்ட செல்வார்கள். இந்நிலையில் கடந்த வியாழனன்று மாலையும், இவர்கள் 4 பேரும் விறகு வெட்ட சென்றனர்.

சிறிது நேரத்தில், 3 பெண்களும் வீட்டுக்கு கிளம்பலாம் என்று சொல்லவும், கோமதி மட்டும் இன்னும் கொஞ்சம் விறகு வெட்டி எடுத்து வரவேண்டியுள்ளது. அதனால் நீங்கள் முன்னாடி போங்கள் என்று கூறியதாகத் தெரிகிறது. அதனால் அந்த 3 பெண்கள் மட்டும் வீட்டுக்கு வந்துவிட்டனர். ஆனால், கோமதி வெகு நேரமாகியும் திரும்பி வரவே இல்லை. அதனால்  10 பெண்கள் சேர்ந்து திரும்பவும் காப்புக் காட்டுக்கு சென்று, கோமதியை தேடி இருக்கிறார்கள். அப்போதுதான், கோமதி கழுத்து அறுக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.

அவரது துணிகள் கிழிக்கப்பட்டு இருந்தன. இதைப் பார்த்து அலறிய பெண்கள், உடனடியாக சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், கோமதியின் சடலத்தை மீட்டனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #BRUTALLY #MURDERED