‘ சொந்த தம்பினு கூட பார்க்காமல்’... ‘அண்ணன் செய்த பகீர் காரியம்’... ‘பட்டப்பகலில் நடந்த பயங்கரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 23, 2019 09:59 AM

தருமபுரி அருகே சொந்த தம்பியை, அண்ணனே குத்தி கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

brother killed his elder brother due to property issue

தருமபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டையில், கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் காவேரி-சத்தி தம்பதியினர். இவர்களுக்கு 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இந்த தம்பதிக்கு சொந்தமாக 75 சென்ட் நிலம் உள்ளது. இதில், மூத்த மகன் வெங்கடாஜலம், தமக்கு சொத்தில் அதிக பங்கு தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அவரது தம்பிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, வெங்கடாஜலத்துக்கும், அவரது தம்பி நரசிம்மனுக்கும் இடையே கடந்த வியாழக்கிழமையன்று தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை குமாரசாமிப்பேட்டையில் உள்ள சந்தோஷ் திரையரங்கம் முன்பு, நரசிம்மன் தமது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு வாகனத்தில் வந்து வழி மறித்த அண்ணன் வெங்கடாஜலம், தம்பி என்றும் பாராமல் நரசிம்மனை கத்தியால் மார்பில் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த நரசிம்மன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த படுகொலை, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

Tags : #MURDERED #DHARMAPURI #BROTHER #PROPERTY