'3 வயது பெண் குழந்தை கொலையில் திடீர் திருப்பம்'... 'இடையூறாக இருந்ததால், தாயே விஷம் வைத்து கொலை செய்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 27, 2019 12:20 PM

கோவையில் தலை மற்றும் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 3 வயது சிறுமியை, அவரது தாயே கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 year old girl child murdered in coimbatore

சரவணம்பட்டி கரட்டுமேடு குன்றில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு அருகே முட்புதரில் 3 வயது மதிக்கத்தக்க சிறுமியின் சடலம் கிடப்பதாக கடந்த திங்கள்கிழமையன்று காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயங்களுடன் கிடந்த சிறுமியின் சடலத்தை மீட்ட போலீசார், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு பேக்கரி ஒன்றில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், குழந்தையை அடையாளம் கண்டு தன்னுடையதுதான் என்றுக் கூறி கதறி அழுதுள்ளார்.

கதறி அழுவது போல் நடித்த ரூபிணிதான் குழந்தையை கொன்றவர் என்பது போலீசாரின் தீவிர விசாரணையில் அம்பலமானது. அப்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. 4 ஆண்டுகளுக்கு முன் அதேப் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை திருமணம் செய்த ரூபிணிக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது. சில நாட்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனைப் பிரிந்த ரூபிணி, குழந்தையுடன் தனியே வசித்து வந்துள்ளார்.

ரூபிணியின் செல்போனுக்கு வந்த ராங் நம்பரில் அறிமுகமான அதேப் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் வசித்து வந்த தாய் ரூபிணிக்கு, குழந்தை இடையூறாக இருந்ததால் பெற்ற குழந்தை என்றும் பாராமல் குழந்தைக்கு பிஸ்கட்டில் விஷம் வைத்து கொடுத்துள்ளார். குழந்தையின் உடலை தூக்கிச் சென்ற தமிழ்ச்செல்வன் கரட்டுமேடு பகுதியில் உள்ள முட்புதரில் வீசிச் சென்றுள்ளான். விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ரூபிணியை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தமிழ்ச்செல்வனை தேடி வருகின்றனர்.

Tags : #MURDERED #GIRLCHILD #COIMBATORE