'கட்சியில் மீண்டும் சேர மறுத்த இளைஞர்'... 'தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 27, 2019 01:44 PM

கட்சியில் மீண்டும் சேர மறுத்த இளைஞர், தாயின் கண்முன்னே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

youth killed by relative due to party issues in coimbatore

கோவை தடாகம் ரோடு குமாரசாமி காலனியை சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது மனைவி பிரேமலதா. இவர்களது மகன் 26 வயதான சந்தோஷ் ஜோதிடராக இருந்துள்ளார். மேலும் இவர், ஒரு கட்சியின் இளைஞர் அணி பொறுப்பிலும் இருந்து உள்ளார்.

இவர்களது தூரத்து உறவினரான விஜயகுமார் என்பவரும் அக்கட்சியில் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தோஷ், அக்கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதனால் விஜயமாருக்கும், சந்தோசுக்கும் இடையே பிரச்சினை நிலவி வந்து உள்ளது. விஜயகுமார், சந்தோசிடம் மீண்டும் கட்சியில் இணையும் படி கூறியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு அவர் மறுத்து வந்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், சந்தோஷ் தனது தாயார் பிரேமலதாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, வீரகேரளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நாகராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல், அவர்களை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் சந்தோசை பிடித்துக்கொண்டு கத்தியால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் குத்தியதாகத் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரேமலதா தனது மகனை காப்பாற்றும்படி கத்தினார். ஆனால் படுகாயம் அடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்த தகவலின் பேரில் வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் சந்தோசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சந்தோசின் தூரத்து உறவினர் விஜயகுமார் உள்ளிட்ட 3 பேர் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தில் தப்பி ஓடியவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கட்சியில் சேர மறுத்ததால், கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags : #MURDERED #COIMBATORE