‘என்னயா கண்டிக்கிற’... ‘ஆண் நண்பருடன் சேர்ந்து’... ‘15 வயது சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்’... 'நெஞ்சை உலுக்கும் சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Aug 20, 2019 09:35 AM

10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதே ஆன மகள், தன் தந்தையை, ஆண் நண்பருடன் சேர்ந்து பாலில் தூக்க மாத்திரை கலந்து, கத்தியால் குத்தி, கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

15 year old girl, boyfriend stab father to death for objecting

ராஜஸ்தானைச் சேர்ந்த 40 வயதான ஜெயக்குமார் ஜெயின், தன் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். துணி வியாபாரம் செய்து வரும் இவருக்கு, ராஜாஜி நகர் பகுதியில் சொந்தமாகக் கடை உள்ளது.  இந்நிலையில் உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஜெயக்குமாரின் மனைவியும், அவரது மகனும் புதுச்சேரிக்கு சென்றனர். வீட்டில் ஜெயக்குமாரும், அவரின் 15 வயது மகளும் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது கடந்த ஞாயிற்றுகிழமை காலை 10.30 மணியளவில், ஜெயக்குமாரின் வீட்டில் இருந்து புகை வந்துள்ளது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலின்பேரில், விரைந்த தீயணைப்பு வீரர்கள் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு குளியலறையில்,  ஜெயக்குமார் பாதி எரிந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார். உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஜெயக்குமாருடன் அவரின் மகள் இருக்கும் விவரம் தெரிந்தது. இதனால் அவரிடம் விசாரித்தபோது நான் அம்மா இல்லாததால் உறவினர் வீட்டுக்குச்  சென்றுவிட்டேன் எனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறியுள்ளார்.

சிறுமியின் பதிலில் திருப்தியடையாத காவல்துறையினர், தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர். அதில் சிறுமி தன் ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். போலீஸிடம் அளித்த வாக்குமூலத்தில், `நானும் இதேப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் நண்பர்களாகப் பழகி வந்தோம். இதை என் தந்தை கண்டித்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு என்னைக் கடுமையாகத் தாக்கினார். இதனால் அவர் மீது இருந்த ஆத்திரத்தில் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார்’.

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள். `ஜெயக்குமார் தன் மகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அடித்துள்ளார். நண்பருடன் பழகுவதைத் தவிர்க்குமாறு கூறியுள்ளார். தன் தந்தை மீதிருந்த ஆத்திரத்தில் கொலை செய்ய முடிவு செய்துள்ளார் மகள். இதற்குத் தன் நண்பரையும் அழைத்துள்ளார். ஜெயக்குமாருக்குப் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, பின்னர் அவர் மயக்கமடைந்ததும் கத்தியால், உடலில் 10 இடங்களில் குத்தியுள்ளார். அதன்பிறகு ஜெயக்குமாரின் உடலை வெளியில் தூக்கி வீச முடிவுசெய்து, ஆண் நண்பரை வரவழைத்துள்ளார்.

ஆனால், உடலைக் கொண்டு செல்லும்போது மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தால் பாத்ரூமில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். அதன் பின் இருவரும் வெளியேறிவிட்டனர். பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலம் கைப்பற்றப்பட்டது. உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமியும் அவரின் ஆண் நண்பரையும் கைது செய்துள்ளோம்’ எனக் கூறினர்.

Tags : #BRUTALLY #MURDERED #BANGALORE