'அவரை கட்டி புடிச்சு, காலுல விழணும்'?... 'ரசிகர் செய்த வெறித்தனம்'... ஹிட் அடித்த புகைப்படம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Jan 16, 2020 12:30 PM

கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்கள் இருப்பார்கள், ஆனால் சிலர் மட்டும் வெறித்தனமான ரசிகராக இருப்பார். அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் புகைப்படம் மூலம், ரசிகர் ஒருவர் கோலிக்கு எவ்வளவு வெறித்தனமான ரசிகர் என்பது புலப்பட்டுள்ளது.

Virat Kohli’s fan sports unique hairstyle at Wankhede

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியினை காண ரசிகர் ஒருவர் வந்திருந்தார். கிரிக்கெட் போட்டியை பார்த்தார்களா இல்லையோ அந்த ரசிகரை தான் பலரும் நோட்டமிட்டார்கள் என்று சொல்லலாம். அதற்கு காரணம் அந்த ரசிகரின் வித்தியாசமான சிகை அலங்காரம். சிராக் கிளாரே என்ற அந்த ரசிகர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் வெறித்தனமான ரசிகர்.

இதன்காரணமாக கோலியின் முகத்தை தனது பின்னந்தலையில் சிகை அலங்காரம் மூலம் மிகவும் தத்துருவமாக வரைந்துள்ளார். போட்டியினை நேரில் கண்டு மகிழ்ந்த அந்த இளைஞர், போட்டியின் போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, கோலி தற்போது இதயத்திலிருந்து, தலைக்கு சென்று விட்டார் என குறிப்பிட்டிருந்தார்.

போட்டிக்கு முன்பு ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்த சிராக், '' பல வருடங்களாக தான் கோலியின் தீவிர ரசிகராக இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவரை ஒரு முறை சந்திக்க வேண்டும் என்பேதே தனது கனவு என குறிப்பிட்டுள்ள அவர், கோலியை நேரில் பார்க்கும் போது அவரை கட்டியணைத்து, அவரது கால்களை தொட வேண்டும்'' என கூறியுள்ளார்.

Tags : #VIRATKOHLI #MUMBAI #CRICKET #INDIA VS AUSTRALIA #WANKHEDE