‘சரக்கு ரயில் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்’.. பனிமூட்டத்தால் ஏற்பட்ட விபத்து.. 20 பேர் படுகாயம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 16, 2020 12:15 PM

பனிமூட்டதால் சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mumbai Bhubaneswar Lokmanya Tilak Express derail in Odisha

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் அருகே லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை விபத்துக்குள்ளானது. கட்டாக் மாவட்டத்தில் உள்ள சாலாகோன்-நெற்குந்தி ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதனால் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன.

இதில் சுமார் 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பனிமூட்டத்தின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Tags : #TRAINACCIDENT #MUMBAI #TILAKEXPRESS #INJURED