பிராக்டீஸ் பண்ணாம 'இப்டி' ஊர சுத்துறாரு... இதெல்லாம் 'கேட்க' மாட்டீங்களா?... பிரபல அணியை கேள்வி கேட்ட ரசிகர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் வருகின்ற மார்ச் 29-ம் தேதி தொடங்குகின்றன. இதையொட்டி ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களும் பயிற்சியை முன்னதாகவே துவக்கியுள்ளனர். ரசிகர்களின் பேவரைட் அணிகளில் ஒன்றான சென்னை அணியும் பயிற்சியை முன்னதாகவே துவங்கி விட்டது.

ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுவதைப் பொறுத்தே அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதால், தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் சென்னை கேப்டன் தோனி மாலத்தீவில் ஊரை சுற்றும் புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர் மேட்சுக்கு பிராக்டீஸ் பண்ணாம இப்டி ஊர் சுத்துறாரு? இதெல்லாம் கேட்க மாட்டீங்களா? என சென்னை அணியிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
— Chennai Super Kings (@ChennaiIPL) February 2, 2020
பதிலுக்கு சென்னை அணி படமொன்றில் வடிவேலு குதிரையில் ஏறி தப்பி செல்லும்போது குதிரைக்கு சொந்தக்காரர், வருவாரு இரு என்று சொல்லும் புகைப்படமொன்றை பதிவிட்டு பதில் அளித்து இருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் தலைவர் 2-வது இன்னிங்ஸ்க்கு ரெடி ஆகிட்டாரு என்று மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
