'இவ்வளவு ஈஸியா கிடைக்குது'... 'ரகசிய கேமரா மூலம் ரெகார்ட்'... 'தீபிகா' வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jan 16, 2020 11:40 AM

நாட்டில் பெண்கள் மீது ஆசிட் வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தடை இருந்தும் நாட்டில் எவ்வளவு எளிதாக ஆசிட் கிடைக்கிறது என்பதை தீபிகா ரகசிய கேமரா மூலம் படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார்.

Deepika Padukone Shows How Easy it is to Procure Acid in Mumbai

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் வெளிவந்த படம் ‘சப்பக்’. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உண்மை வாழ்க்கைக் கதையை இத்திரைப்படம் காட்டுகிறது. இதில் பாதிப்புக்குள்ளான பெண்ணாக நடித்திருந்தார் தீபிகா. இந்த படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,  மும்பை நகருக்குள்ளேயே எவ்வளவு எளிதில் ஆசிட் வாங்க முடிகிறது என்பதைக் காட்டும் முயற்சியை தீபிகா மேற்கொண்டார்.

ரகசிய கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இளைஞர்கள் சிலர் மாறுவேடம் இட்டு கொண்டு பல்வேறு கடைகளுக்கு சென்று ஆசிட் வாங்குகிறார்கள். தடை விதிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும் அவர்களால் எளிதாக ஆசிட் வாங்க முடிகிறது. யாரும் எவ்வித பாதுகாப்பு அல்லது தடை அல்லது சட்ட நடைமுறைகளை மதிக்கவே இல்லை.

இதற்கிடையே ஒரே ஒரு கடைக்காரர் மட்டும், ''எதற்காக ஆசிட் வாங்குகிறாய்? பெண்ணின் மீது வீசவா? உன் ஐடி கார்டு வேண்டும்'' என கேட்கிறார். ஆனால் மாறுவேடத்தில் இருக்கும் அந்த இளைஞர் ஐடி கார்டை கொடுக்க மறுக்கிறார். இதையடுத்து அந்த கடைக்காரர் ஆசிட் கொடுக்க முடியாது என கூறுகிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் இது போன்ற ஆசிட் விற்பனையை தடுக்க நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என தீபிகா வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் தெருவில் நடந்து செல்லும் போது, இந்த சமூகம் அவளைப் பார்க்கும் விதத்தை தானே முன் சென்று வீடியோவாக தீபிகா பதிவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #MUMBAI #DEEPIKA PADUKONE #ACID #DESPITE BAN