நான் சி.எம் டிரைவர் 'அமைதியா' இருங்க... சிறுமியின் குடும்பத்தாரை... 'அதிரவைத்த' போலீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Jan 09, 2020 09:03 PM
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் டிஐஜி அத்துமீறி நடந்து கொண்டதால், 17 வயது தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதிவிட்டு மும்பையில் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்றபோது, சிறுமியின் பெற்றோர்களை மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் கார் டிரைவர் மிரட்டிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிறுமியின் குடும்பத்தை மிரட்டிய அந்த டிரைவரின் பெயர் டிங்கர் சால்வே. குற்றம் சாட்டப்பட்ட நிஷிகாந்த் டிசிபியாக இருந்தபோது அவருக்குக்கீழ் டிங்கர் சால்வே பணிபுரிந்துள்ளார். இதற்காக அவர் சிறுமியின் குடும்பத்தை மிரட்டினாரா? என்றரீதியில் துறைரீதியான விசாரணை டிங்கர் சால்வே மீது தொடங்கி இருக்கிறது. சிறுமியின் குடும்பத்தாரிடம் டிங்கர், '' நான் சி.எம் உத்தவ் தாக்கரேவின் கார் டிரைவர். அமைதியாக இருங்கள்,'' என கூறியதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால் அன்று கோர்ட்டில் தனக்கு தெரிந்த ஒருவரை சந்திப்பதற்காக தான் கோர்ட்டுக்கு சென்றதாக டிங்கர் சால்வே விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். தற்போது சிஎம் உத்தவ் தாக்கரேவின் அலுவலகம் இந்த விஷயம் குறித்து அறிந்துகொண்டு டிங்கர் சால்வேவை முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.