என்ன அமித்ஷா வீட்லயே இந்த நிலைமையா? அப்படி என்ன நடந்துச்சு? நீங்களே பாருங்க!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | Mar 30, 2019 10:54 PM

 

Amitshah grand daughter refuses to wear hat with bjp symbol

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில்  குஜராத்தில் உள்ள அத்வானியின் காந்திநகர் தொகுதியில்போட்டியிட உள்ளார். இதற்காக இன்று அகமதாபாத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்  ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள வந்த அமித்ஷா, பேத்தியை பார்த்ததும் அருகில் சென்றார். அப்போது கடும் வெயில் என்பதால் குழந்தை தன் தலையில் ஒரு சாதாரண ஃபேன்சி தொப்பி போட்டிருந்தது.

இந்நிலையில் குழந்தை அருகில் வந்த அமித்ஷா அந்த ஃபேன்சி தொப்பியை கழற்றிவிட்டு, பாஜகவின் தாமரை சின்னம் பொறித்த தொப்பியை பேத்திக்கு அணிவித்தார். ஆனால் அந்த குழந்தையோ அமித் ஷா அணிவித்த பாஜக தொப்பியை அணிய மறுத்து தொப்பியை கழற்றிவிட்டது. இப்படியே 3 முறையும் அந்த பாஜக தொப்பியை அந்த குழந்தை கழற்றிவிட்டது.

இந்நிலையில், அந்த குழந்தைக்கு பாஜகவின் தாமரை சின்னம் பொறித்த தொப்பி பிடிக்காததால் ஏற்கனவே தான் போட்டிருந்த ஃபேன்சி தொப்பியை எடுத்து தானே தலையில் போட்டு கொண்டது. இப்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Tags : #LOKSABHAELECTIONS2019 #BJP #AMITSHAH