'அதுக்காக கைல, காலுல எல்லாம் விழ முடியாது'...'பொசுக்குன்னு இப்படி பேசிட்டாரு'...அதிர்ச்சியில் மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 28, 2019 12:29 PM

தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கும் நிலையில்,பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் விறுவிறுப்பாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக  வந்த, கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரை பேசிய பேச்சு மக்களை அதிர்ச்சியடைய செய்தது.

Thambi Durai got angry during the election campaign in karur

கரூர் அருகேயுள்ள ஏமூர் புதூர் காலனியில் தேர்தல்  பரப்புரையில் ஈடுபட்டு கொண்டிருந்த அவரிடம்,அப்பகுதியில் உள்ளவர்கள் தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் பேருந்து வசதியில்லை என்றும் கூறி தம்பிதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனை சற்றும் எதிர்பாராத தம்பிதுரை ‘‘நீங்க ஓட்டு போட்டா போடுங்க, போடாட்டி போங்க. அதற்காக உங்க கைல, காலுல விழ முடியாது.ஜெயிச்சதுக்கு பின்பு நான் வராமல் போகமாட்டேன் என கோபத்துடன் பதிலளித்தார்.இதனை சற்றும் எதிர்பாராத மக்கள் அதிர்ச்சியில் திகைத்து நின்றார்கள்.

மேலும் பேசிய தம்பிதுரை  ''அடுத்து நடக்கப்போகும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் நான் வருவேன். உங்க எம்பி என்ன செய்தார் என்று எதிர்க்கட்சிகள் கேட்டால்,பேருந்து விடுமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்,ரூ.81 கோடியில் குடிநீர் திட்டம் தொடங்கியிருக்கிறேன்,தொகுதியில் 8,000 கிராமங்களுக்குச் சென்றுள்ளேன்'' என அவர்களிடம் கூறுங்கள் என பேசினார்.இதற்கு முன் பலர் எம்பிக்களாக இருந்துள்ளனர். அவர்களெல்லாம் உங்களுக்கு என்ன செய்தார்கள்’’ என கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.

தம்பிதுரை இவ்வாறு பேசியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் ஏமூர், ஏமூர் காலனி, வடக்குபாளையம் உள்ளிட்ட இடங்களிலும் குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தம்பிதுரையிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : #AIADMK #LOKSABHAELECTIONS2019 #KARUR #THAMBI DURAI