என்ன தேர்தலுக்கு தங்கத்தில் ஓட்டு இயந்திரமா? விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | Mar 30, 2019 10:37 PM

 

kovai gold merchant designed TN political party symbols in gold

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா. இவர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்து வருகிறார்.

இவர், தற்போது 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி 300 மி.கிராம் தங்கத்தில், ஒரு இன்ச் அளவில் கட்சி சின்னங்களை உருவாக்கி உள்ளார். மேலும், காம்பஸில் பென்சிலை கொண்டு ‘நடுநிலையாக வாக்களிப்போம், உண்மையை நிலை நாட்டுவோம்’ என்பதை உணர்த்தும் விதமாக சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

மேலும் ஒரு கிராம் வெள்ளியைக் கொண்டு 18 சின்னங்களை வடிவமைத்து, ஏப்ரல் 18ம் தேதி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்றையும் வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய யு.எம்.டி ராஜா, மக்கள் அனைவருக்கும் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இதனை செய்ததாகவும், இதை வடிவமைப்பதற்கு ரூ. 2000 செலவானதாகவும், இரண்டு நாள் உழைப்பில் இதனை உருவாக்கி முடித்ததாகவும் கூறினார்.

இவர் பொங்கலின் போது மைக்ரோ அளவு தங்கத்தின் மூலம் பொங்கல் பானை, கரும்பு, காளை, அடுப்பு உள்ளிட்டவற்றை வடிவமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #LOKSABHAELECTIONS2019 #TAMILNADU