'மறுபடியுமா?’.. 2-வது முறையும் மாம்பழத்தை மறந்து ஆப்பிளுக்கு ஓட்டு கேட்ட அமைச்சர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 31, 2019 10:42 AM

மீண்டும் ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டு கேட்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN minister mistakenly said apple instead of mango - controversial

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல்லில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது தங்களுடைய கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஆதரவு கேட்டு பேசியிருந்தார்.

அது சமயம் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு ஓட்டு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன், மேடையில் ராமதாஸ் வீற்றிருக்கும்போதே, பாமகவின் பிரதான சின்னமான மாம்பழம் சின்னத்திற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள் என்று மக்கள் முன்னிலையில் தவறுதலாக உளறியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் திண்டுக்கல்லின், அனுமந்த் நகர், மாலைப்பட்டி மற்றும் திண்டுக்கல் ஒன்றியத்துக்குட்பட்ட இடங்களில், பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டபோது தவறுதலாக மீண்டும் இரண்டாவதுமுறை, ‘நீங்கள் அனைவரும் ஆப்பிள் சின்னத்திலே.. (ரோல் ஆகிறார்) மாம்பழ சின்னத்திலே வாக்களித்து’ என்று பேசியுள்ள சம்பவம் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

Tags : #LOKSABHAELECTIONS2019 #AIADMK #APPLE #PMK