தென்னிந்தியாவில் இன்னொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி.. எங்க தெரியுமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 31, 2019 01:39 PM

நாடாளுமன்ற அல்லது பாராளுமன்ற அல்லது மக்களவை அல்லது லோக்சபா தேர்தல் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

rahul gandhi to contest second seat in wayanad kerala loksabhaelection

முக்கிய கட்சிகள் பலவும் தங்கள் கட்சி கூட்டணி விபரங்கள்,  எங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றை அறிவித்ததோடு தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என காங்கிரஸ் கமிட்டியில் இருந்து அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் நிற்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மேலும் தென்னிந்தியப் பகுதியில் இருக்கும் ஏதேனும் ஒரு தொகுதியில் நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் சேர்த்து மொத்தம் இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

வயநாடு தொகுதியை பொறுத்தவரை அங்கு இதுவரை 2 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதால் 2009- ஆம் ஆண்டிலிருந்து இந்த தொகுதி காங்கிரஸின் கோட்டையாக உள்ளது என்பதும் உத்திரபிரதேசம் அமேதி தொகுதியை பொறுத்தவரை ராகுல் காந்திக்கு எதிராக பாஜக சார்பில் ஸ்மிருதி இராணி நிற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.