லாட்டரியில் அடிச்ச 41 லட்சம்.. "ஆத்தாடி டிக்கெட்ட எங்க வெச்சேன்னு தெரியலயே".. கவுண்டமணி ஸ்டைலில் தேடிய பெண்.. கடைசில ட்விஸ்ட்!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா, துபாய், கேரளா, கனடா உள்ளிட்ட பல இடங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனை என்பது அதிகாரபூர்வமாக இயங்கி வருவதாகும்.

இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள மக்கள் பலரும் அடிக்கடி லாட்டரி டிக்கெட் வாங்குவதுடன் மட்டுமில்லாமல், தங்கள் வாழ்வும் ஒரு நாள் நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த லாட்டரி டிக்கெட்டில் அதிர்ஷ்டம் அடித்து பலரது வாழ்க்கையும் தலை கீழாக திரும்புவது குறித்த செய்திகளையும் நான் நிறைய கடந்து வந்திருப்போம். அப்படி ஒரு சூழலில் பெண் ஒருவருக்கு லாட்டரியில் சுமார் 41 லட்ச ரூபாய் பரிசு விழுந்த நிலையில், அந்த லாட்டரி டிக்கெட் வைத்த இடம் மறந்து போன சம்பவம் அரங்கேறி உள்ளது.
அமெரிக்காவில் பெரும்பாலான இடங்களில் லாட்டரி பயன்பாடு இல்லை என்றாலும், ஒரு சில மாகாணங்களில் லாட்டரி விற்பனை பரவலாக இருந்து வருகிறது. அப்படி மேரிலாண்ட் மாகாணத்தை சேர்ந்த ஸ்ரீஜனா வாஸ்ட்டி என்ற பெண்ணும் சமீபத்தில் லாட்டரி சீட்டு வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஸ்ரீஜனா வாங்கிய லாட்டரிக்கு சுமார் 50,000 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 41 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. முதலில் 50 டாலர்கள் மட்டுமே பரிசாக அவர் வென்றதாக கருதி உள்ள நிலையில், பின்னர் தான் 50,000 டாலர்கள் என்பது ஸ்ரீஜனாவுக்கு தெரிய வந்துள்ளளது. ஆனால், அப்போது தான் சரியான ட்விஸ்ட் ஒன்றும் காத்திருந்துள்ளது.
கவுண்டமணி ஒரு படத்தில், லாட்டரியில் 15 லட்சம் ஜெயித்த சமயத்தில், அதன் லாட்டரி டிக்கெட்டை சவரப்பெட்டிக்குள் வைத்திருப்பார். அப்போது அவருடன் இருக்கும் செந்தில், லாட்டரியில் பணம் கிடைக்க போகிறது என கருதி, லாட்டரி டிக்கெட் உள்ளே இருப்பது தெரியாமல் அந்த சவரப்பெட்டியை ஆற்றில் வீசி விடுவார். பின்னர் இது கவுண்டமணிக்கு தெரிய வர, அந்த காட்சி முழுவதும் அமர்க்களமாக இருக்கும்.
ஏறக்குறைய அப்படி ஒரு சம்பவம் தான் ஸ்ரீஜனாவுக்கும் நடந்துள்ளது. தான் வாங்கிய லாட்டரி டிக்கெட் வைத்திருந்த இடத்தை மறந்து போயுள்ளார் ஸ்ரீஜனா. இதனைத் தொடர்ந்து அதனை தேடி வந்த ஸ்ரீஜனா, பெரிய பரிசு தொகை கிடைத்த லாட்டரியை தொலைத்ததை எண்ணி அதிர்ச்சியும் அடைந்துள்ளார். இதனை குடும்பத்தினர் உதவியுடன் வீடு முழுக்க தேடிய ஸ்ரீஜனா, கடைசியில் அதனை அவரது சூட்கேஸ் ஒன்றில் கண்டுபிடித்துள்ளார்.
முன்னதாக அந்த டிக்கெட் தொலையாமல் இருப்பதற்காக சூடேக்சில் ஸ்ரீஜனா தான் வைத்திருந்தார். ஆனால் அந்த இடம் மறந்து போகவே பரபரப்பும் உருவாகி உள்ளது. இதனால் நிம்மதி அடைந்த ஸ்ரீஜனா, தனக்கு கிடைக்க போகும் பணத்தை கொண்டு செய்ய போகும் விஷயங்களையும் திட்டம் போட்டு வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மற்ற செய்திகள்
