ஒரு வருசமா பூட்டி இருந்த வீட்டில்.. டிரம்முக்குள் இருந்த பெண்ணின் உடல் பாகங்கள்??.. நாட்டையே அதிர வெச்ச கொடூரம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலத்தில், சுமார் ஒரு வருடங்கள் கழித்து திறக்கப்பட்ட வீட்டிற்குள் இருந்த விஷயம், அதன் உரிமையாளரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Also Read | "யார் இறந்து போனாலும் ஒரே ஒரு மாலை தான்".. ஊரே சேர்ந்து எடுத்த அதிரடி முடிவு!!.. தமிழ்நாடு முழுக்க வைரல்!!
ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு சொந்தமான வீடு ஒன்றை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக வாடகைக்கு கொடுத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் தம்பதி ஒருவர் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்ததாக சொல்லப்படும் நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் அங்கிருந்து காலி செய்து விட்டு சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
முன்னதாக, அந்த வீட்டில் இருந்த வாடகைதாரர் உரிய முறையில் வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். அவரது மனைவியும் கர்ப்பமாக இருந்ததாக சொல்லப்படும் நிலையில், அவரை பார்க்க போவதாக கூறி விட்டு பணமும் செலுத்தாமல் அங்கிருந்து கிளம்பி போன நபர், பின்னர் திரும்பவே இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
ஓராண்டுக்கும் மேலாக அந்த வீடு பூட்டப்பட்டு கிடந்த நிலையில், அங்கே தங்கி இருந்த வாடகைத்தாரரின் உடமைகளை அந்த வீட்டில் இருந்த உரிமையாளர் அகற்றுவதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது முன்பு இருந்த நபரின் பொருட்களை அகற்றிக் கொண்டிருந்த சமயத்தில் அங்கே இருந்த டிரம்மில் கடும் அதிர்ச்சி ஒன்று அவருக்கு காத்திருந்துள்ளது.
அதற்குள் பெண் ஒருவரின் உடல் பாகங்கள் சிதைந்து போயிருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் இதைக் கண்டு பதறிப் போயுள்ளார். உடனடியாக இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கும் அவர் தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடம் வந்த போலீசார், இது தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு வருடத்திற்கு முன்பு வாடகை கொடுக்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிய நபர், இந்த ஒரு வருடத்திற்குள் உரிமையாளருக்கு தெரியாமல் மீண்டும் உள்ளே சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஒரு வருடத்திற்கு முன்பு அங்கே தங்கி இருந்த நபரை தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக பூட்டி கிடக்கும் வீட்டிற்குள் இருந்த டிரம்மில் பெண்ணின் உடல் பாகங்கள் கிடந்த விஷயம், அப்பகுதி மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
