ஆன்லைன் காதலனை சந்திக்க 5000 கிமீ பயணித்த பெண்.. ஆசையாய் போனவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆன்லைனில் சந்தித்த ஆண் நண்பரை நேரில் சந்திக்க சென்ற பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெருவில் நடந்துள்ளது.
மெக்சிக்கோவை சேர்ந்தவர் பிளாங்கா அரேலானோ. 51 வயதான பிளாங்கா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆன்லைனில் ஒருவரை சந்தித்திருக்கிறார். நட்பாக துவங்கிய இந்த உறவு நாளடைவில் காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூலையில் தனது குடும்பத்தினரிடம் தனது காதல் குறித்து பேசியிருக்கிறார் பிளாங்கா. அப்போது, தனது காதலன் பெருவில் உள்ள ஹுவாச்சோ எனும் கடற்கரை நகரத்தில் வசித்து வருவதாகவும் அவரது பெயர் ஜுவான் பாப்லோ ஜீசஸ் வில்லாஃபுர்டே என்றும் சொல்லியிருக்கிறார்.
மேலும், தான் விரைவில் அவரை சென்று சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் பிளாங்கா சொல்லியிருக்கிறார். இதனிடையே, பெருவிற்கு பயணம் செய்திருக்கிறார் பிளாங்கா. திடீரென அவரிடம் இருந்து எவ்வித அழைப்புகளும் வராததால் சந்தேகமடைந்த பிளாங்காவின் உறவினர்கள் கவலையில் ஆழந்துள்ளனர்.
கடைசியாக நவம்பர் 7 ஆம் தேதி பிளாங்கா தனது சகோதரர் மகளான கார்லா அரேலானா என்பவரிடத்தில் பேசியிருக்கிறார். அப்போது, தான் பெருவில் தனது காதலனுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால், அதுவே அவரது கடைசி அழைப்பாக இருந்திருக்கிறது. அதன்பிறகு அவரை தொடர்புகொள்ளவும் முடியாததால் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார் கார்லா. அதில்,"இப்படி ஒரு நிலைமைக்கு தள்ளப்படுவேன் என கனவிலும் நினைக்கவில்லை. எனது வாழ்க்கையின் முக்கியமான நபரை கண்டறிய உதவி கோருகிறேன். என்னுடைய அத்தை பிளாங்கா பெருவில் காணாமல்போய்விட்டார். அவர் உயிருடன் இருக்கிறாரா? என்பது கூட தெரியாமல் தவிக்கிறோம்" என தன்னுடைய பதிவில் கார்லா குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, நவம்பர் 9 ஆம் தேதி பெருவின் ஹுவாச்சோ கடற்கரையில் பிளாங்கா சடலமாக மீட்டப்பட்டிருக்கிறார். அவரது உடலில் இருந்து பாகங்கள் திருடப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து பெரு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read | கனவுல தொல்லை கொடுத்து வந்த பாம்பு.. பரிகாரம் பண்ண போனவரின் நாக்குலயே கொத்திய பரபரப்பு சம்பவம்..