"அட, அமர்க்களமான ஐடியாவா இருக்கே"... ஸ்கூட்டர் உதவியுடன் தொழிலாளர்கள் செஞ்ச அற்புதம்.. வியந்து போன ஆனந்த் மஹிந்திரா!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.
Also Read | "உங்க ஊருக்கு பொண்ணே தர மாட்டோம்".. ஒரு வருசமா No கல்யாணம்.. 'ஈ'க்களால் தூக்கம் தொலைத்த கிராமம்..
அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.
இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.
இந்த நிலையில், தற்போது ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோவும் சம்மந்தப்பட்ட நபர்களை பாராட்டி அவர் தெரிவித்துள்ள கருத்தும் இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
ஸ்கூட்டர் ஒன்றை பயன்படுத்தி கட்டிட தொழிலாளர்கள் தங்களின் வேலைகளை எளிதாக்குகின்றனர். அந்த வீடியோவில் பல மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்றை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்தில் மேல் பகுதியில் கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல வேண்டும் என்ற சூழலில் படியேறி தொழிலாளர்கள் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும்.
அப்படி ஒரு சூழலில் எளிதாகவும் வேகமாகவும் பணியை முடிப்பதற்காக ஸ்கூட்டர் ஒன்றின் என்ஜினோடு கருவி ஒன்றை பொருத்தி அதில் இருந்து கயிறு ஒன்றை கட்டி, கட்டிட வேலை நடக்கும் மாடியை ஒட்டி வைக்கப்பட்டுள்ள கப்பியோடு இணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், கீழே இருந்து கட்டுமான பொருட்களை கயிற்றில் கட்டி வைத்து விட்டு ஸ்கூட்டரை இயக்க, கட்டுமான பொருட்கள் எளிதாக மாடியை சென்றடைகின்றன.
இதுகுறித்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, "வாகன எஞ்ஜின்களை பயன்படுத்த முடியும். இதனால் தான் நாம் அதனை பவர் ட்ரெயின்ஸ் என அழைக்கிறோம். இது மின்சார ஸ்கூட்டராக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
கட்டுமான தொழிலாளர்கள் இணைந்து பைக் என்ஜினை கொண்டு தொழில் செய்து வரும் வீடியோ, இந்தியர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வரும் நிலையில் அதிக பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.