ஏழ்மையான பெண்களே டார்கெட்..! குளிர்பானத்தில் மது கொடுத்து இளம்பெண்களை சீரழித்த பெண்... ஆண் நண்பருடன் கைது.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்துணிக் கடைக்கு வரக்கூடிய ஏழைப் பெண்களை டார்கெட் செய்த பெண் ஒருவர் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று பணம் சம்பாதித்த விஷயம் தென்னிந்தியாவை அதிர வைத்திருக்கிறது.

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், விஜயவாடாவில் இருக்கும் படமடாதோட்டவாரி தெருவை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணான நாகசாயி என்பவர் அங்குள்ள பகுதியில் பெண்களுக்கான துணிக்கடை நடத்தி வந்திருக்கிறார். மேலும் அங்கு வாடிக்கையாளராக வரும் பெண்களிடம் நட்பாக பேசி, அவர்களின் குடும்ப பின்னணியை அறிந்து கொள்ளும் நாகசாயி, ஏழ்மையான குடும்ப பின்புலத்தில் இருந்து வரக்கூடிய பெண்களை டார்கெட் செய்து அவர்களிடம் நெருங்கி பழகக்கூடியவர். அப்படி 20 வயது இளம்பெண் ஒருவரை நட்பாக்கி கொண்ட நாகசாயி கடைக்கு துணி எடுக்க வந்த அந்த பெண்ணை தமது வீட்டுக்கு வரும்படி அவரது பண பிரச்சனையை தீர்ப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அவரது வீட்டுக்கு நம்பி சென்ற அந்த இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுக்க அந்த பெண்ணும் மயங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணை தவறான முறையில் வீடியோ எடுத்த நாகசாகி, பிறகு அந்த வீடியோவை காட்டி இளம் பெண்ணிடம் தான் சொல்வது போல் நடந்து கொள்ள வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார். இல்லையென்றால் வீடியோவை இணையதளத்தில் பதிவிடுவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால் பயந்து போன அந்த இளம் பெண் நாகசாயி சொன்னது போல சிலருடன் விலை மதுவாக சேட்டிங் செய்து வந்திருக்கிறார்.
இறுதியாக வாலிபர் ஒருவருடன் நேரில் சந்தித்து விலைமாதுவாக அந்த பெண்ணை நடந்துகொள்ள வைத்துள்ளார் நாகசாயி. இதை தனது ஆண் நண்பரிடன் உதவியுடன் வீடியோ எடுத்துவிட்டார் நாகசாயி. பின்னர் நாகசாயி மற்றும் அவருடைய ஆண் நண்பர் இருவரும் அந்த வாலிபரிடம் 2 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்ட அந்த வாலிபர் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த விஜயவாடா போலீஸார், நாகசாயி மற்றும் அவருடைய ஆண் நண்பரை கைது செய்து பாதிக்க பட்ட பெண்ணை மீட்டதுடன் அவரிடம் இருந்து புகார் பெற்றனர்.
அதன் பிறகு நாகசாயி செய்து வந்த வேலைகள் போலீசாருக்கு தெரிய வந்திருக்கின்றன. இன்னும் எத்தனை பேரின் வாழ்க்கையை நாகசாயி சீரழித்திருக்கிறார் என்று தொகுத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

மற்ற செய்திகள்
