"குழந்தையே பிறக்காதுன்னு நெனச்சிட்டு இருந்த பெண்ணுக்கு.. 11 வது மாசத்தில், 11 ஆம் தேதியில் பிறந்த 11 ஆவது குழந்தை!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Nov 17, 2022 09:36 PM

அடிக்கடி இணையத்தில் நிறைய செய்திகள் அதிகம் வைரல் ஆகி மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

woman thought she will never have baby give 11th baby birth on nov 11

Also Read | "இப்டி தான் அன்னைக்கி ராத்திரி சண்டை நடந்துச்சு".. ஷ்ரத்தா கொலை வழக்கில் பகீர் கிளப்பிய அஃப்தாப்!!

மேலும் இப்படி அதிகம் பகிரப்படும் செய்திகள், வித்தியாசமாகவோ அல்லது மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையிலோ இருக்கும் பட்சத்தில் ஒருவித தாக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்க வாய்ப்புள்ளது.

அந்த வகையில், தற்போது அதிகம் பேசு பொருளாக மாறி வரும் செய்தி, பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர் Satu Nordling Gonzalez. இவரது கணவர் பெயர் Andreas. முன்னதாக, Satu-வுக்கு 21 வயதாக இருந்த சமயத்தில் அவர் முதல் முறையாக கர்ப்பம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், அவரது கருப்பையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, அவரது கரு கலைந்து போனதாகவும் சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல், மனஅழுத்தம் காரணமாக அவரது கருமுட்டை வெளியேறுவதும் நின்று போனதாக தெரிகிறது.

woman thought she will never have baby give 11th baby birth on nov 11

இனிமேல் சதுவால் குழதை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் என்றும், தன்னால் இனிமேல் தாயாக முடியாது என்றும் நினைத்து மனவேதனை அடைந்துள்ளார். ஆனால், அப்படி  இருக்கையில், இரண்டு ஆண்டுகள் கழித்து, அதாவது 2008 ஆம் ஆண்டில் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார் சது நார்ட்லிங். இந்த முறை குழந்தையும் பிறந்துள்ளதால் உச்சகட்ட மகிழ்ச்சியில் சது மற்றும் அவரது கணவர் திளைத்து போயுள்ளனர்.

woman thought she will never have baby give 11th baby birth on nov 11

இந்த நிலையில், தற்போது இந்த தம்பதியினருக்கு 6 பெண் குழந்தைகள் மற்றும் 5 ஆண் குழந்தைகள் என மொத்தம் 11 பிள்ளைகள் உள்ளனர். தன்னிடம் உள்ள பிரச்சனைகள் காரணமாக குழந்தையே கிடைக்காது என வேதனைப்பட்ட பெண்ணுக்கு 11 குழந்தைகள் பிறந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இதில், இன்னொரு சிறப்பான விஷயம் என்னவென்றால், சதுவுக்கு கடந்த சில தினங்கள் முன்பு பிறந்த 11 வது குழந்தை, சரியாக 11/11/2022 என்ற தேதியில் பிறந்துள்ளது தான். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் சது நார்ட்லிங். மேலும், மூத்த பிள்ளைக்கு 14 வயதாகும் நிலையில், சமீபத்தில் பிறந்த குழந்தைக்கு முன்பு 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

woman thought she will never have baby give 11th baby birth on nov 11

குழந்தையே கிடைக்காது என கருதிய பெண்ணிற்கு, 11 ஆவது மாதத்தில் 11 ஆம் தேதியில், 11 ஆவது குழந்தை பிறந்துள்ள விஷயம், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "எதுக்கு இவ்ளோ பிரேக்?".. ராகுல் டிராவிட் விஷயத்தில் ரவி சாஸ்திரி சொன்ன பரபரப்பு கருத்து!!

Tags : #WOMAN #BABY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman thought she will never have baby give 11th baby birth on nov 11 | World News.