"லாட்டரில பணம் ஜெய்ச்சும் இப்டி ஒரு ட்விஸ்ட்டா?".. மனைவி அக்கவுண்ட்டில் பணம் மாற்றியதும் நடந்த பரபரப்பு!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Nov 23, 2022 08:55 PM

துபாய், கேரளா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல இடங்களில் லாட்டரி வாங்கும் பழக்கம் என்பது பெரும்பாலான மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வரும் விஷயமாகும்.

Man won one crore in lottery wife escape with money reportedly

Also Read | Judge தனலட்சுமியால கூட சிரிப்பை அடக்க முடியல..😂விழுந்து விழுந்து சிரிச்ச போட்டியாளர்கள்.. அப்டி யார் Caseபா அது?

அப்படி லாட்டரி டிக்கெட்டை வாங்கி, அதிர்ஷ்டம் உள்ளிட்ட விஷயங்களும் கைகூடி வரும் சமயத்தில், அதிக பணம் கிடைத்து ஒரு நபரின் வாழ்க்கை மாறுவது குறித்து கூட ஏராளமான செய்திகளை கடந்து வந்திருப்போம்.

அப்படி தான் தாய்லாந்தின் இசான் மாகாணத்தை சேர்ந்த மணித் (வயது 49) என்ற நபருக்கும் லாட்டரி மூலம் பரிசு விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவர் எடுத்த டிக்கெட் மூலம், கடந்த சில தினங்களுக்கு முன்பாக 6 மில்லியன் Baht பரிசாக கிடைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 1.3 கோடி ரூபாய் ஆகும். வரி விலக்கு போக, மீதி பணமும் மணித் வங்கிக் கணக்கில் செலுத்தபட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதற்கடுத்து, வெற்றி பெற்ற பணத்தினை தனது மனைவியின் வங்கி கணக்கிற்கும் மணித் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மனைவியான அங்கனரத், கணவன் மணித் லாட்டரியில் வென்ற பணத்தை மொத்தமாக எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி விட்டதாகவும் மணித் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே, அவரது காதலனுடன் அங்கனரத் சென்றிருக்கலாம் என்றும் உறவினர்கள் கருதி உள்ளனர். மனைவியின் இந்த செயலை சற்றும் எதிர்பாராத மணித், முற்றிலுமாக அதிர்ந்து போயுள்ளார்.

மணித் மற்றும் அங்கனரத் ஆகியோருக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில், மனைவி இப்படி ஒரு செயல் செய்தது கடுமையாக மன உளைச்சலுக்கும் மணித்தை ஆளாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அப்படி ஒரு சூழலில், 3 தினங்கள் கழித்து மணித்தின் மனைவி மீண்டும் திரும்பி வந்துள்ளார். ஆனால் பரிசு கிடைத்த பணத்தினை குழந்தைகளுக்கு மட்டும் ஒரு பகுதியை கொடுத்துள்ள அங்கனரத், கணவருடன் இனி சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே போல, அனைவரும் குறிப்பிடுவது போல காதலனுடன் ஓட்டம் பிடிக்கவில்லை என்றும் அங்கனரத் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | "என் பைக் தொலைஞ்சு போச்சு, Pray பண்ணுங்க".. லடாக் போன TTF வாசன் பகிர்ந்த வீடியோ!!.. பரபரப்பு பின்னணி!!

Tags : #MONEY #LOTTERY #LOTTERY TICKET #MAN #WIFE #ESCAPE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man won one crore in lottery wife escape with money reportedly | World News.