மார்க்கெட்டில் வைத்து கொடூரமாக பெண்ணை கொலை செய்த நபர்கள்.! வட இந்தியாவையே உலுக்கிய பரபரப்பு சம்பவம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் மாநிலத்தில் பெண் ஒருவரை சாலையில் வைத்து கொடூரமாக கொலை செய்த செய்தவர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் எனும் இளம் பெண் தனது லிவிங் டுகெதர் பார்ட்னரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்தப் பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில் தற்போது பீகார் மாநிலத்தில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூர் அருகே ஸோட்டி டெயிலோரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அசோக் யாதவ் - நீலம் தேவி தம்பதி. கடந்த சனிக்கிழமை அன்று நீலம் தேவி அருகில் உள்ள சந்தைக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்று இருக்கிறார். அப்போது அங்கு வந்த இருவர் நீலம் தேவியை சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். மேலும் அவருடைய மார்பகங்கள், கைகளை வந்தவர்கள் வெட்டியதாக சொல்லப்படுகிறது. இதனிடையே இதை கண்ட அங்கிருந்தவர்கள் சத்தம் போடவே இருவரும் அங்கிருந்து தப்பி சென்று இருக்கின்றனர்.
இதனையடுத்து நீலம் தேவி ஜவர்ஹலால் நேரு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நீலம் தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அதிகமாக அவருடைய உடலில் இருந்து ரத்தம் வெளியேறியதே இறப்பிற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இந்த மோசமான செயலை செய்தது முகம்மது ஷகீல் மற்றும் அவரது சகோதரர் முகமது ஜூதின் என்பது தெரிய வந்திருக்கிறது.
இதனிடையே சமீபத்தில் முகமது ஷகீல் தங்களது வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும் அப்போது அவரை எச்சரிக்கை செய்து அனுப்பியதாகவும் நீலம் தேவியின் கணவர் அசோக் யாதவ் காவல்துறையினரிடத்தில் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே இது தொடர்பாக ஒருவரை கைது செய்திருப்பதாகவும் மற்றொருவர் இன்னும் தலைமறைவாகவே இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெண் ஒருவரை கொடூரமாக இருவர் கொலை செய்த சம்பவம் பீகார் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
Also Read | மிளகாய் பொடியுடன் வந்த போலி கிறிஸ்துமஸ் தாத்தா.. சர்ப்ரைஸ்-ன்னு காத்திருந்த பாட்டிக்கு வந்த சோதனை..

மற்ற செய்திகள்
