51 வருடத்திற்கு பிறகு கிடைத்த மகள்.. துடைக்கப்பட்டது தாய் மீது விழுந்த பழி... பதற வைக்கும் சதி அம்பலம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Dec 01, 2022 08:54 PM

குழந்தையாக இருந்த போது  காணாமல் போன பெண் ஒருவர், சுமார் 51 ஆண்டுகளுக்கு பிறகு தனது பெற்றோர்களுடன் சேர்ந்துள்ள சம்பவமும், அதன் பின்னால் உள்ள காரணமும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

us woman kidnapped as baby reunited after 51 years

Also Read | இறந்துட்டாருன்னு திதி கொடுத்த குடும்பம்.. 25 வருசம் கழிச்சு தெரிய வந்த உண்மை.. இன்ப அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் அமைந்துள்ள உள்ள Fort Worth என்னும் இடத்தை சேர்ந்தவர் Alta Apantenco. இவருக்கு கடந்த 1969 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மெல்லிசா என்ற குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு சுமார் ஒன்றரை வயதாக இருந்த சமயத்தில், குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக ஆள் வேண்டுமென்றும் விளம்பரம் ஒன்றை தாய் அல்டா கொடுத்துள்ளார். தான் வேலைக்கு சென்று கொண்டிருந்ததால் தனது மகளை பார்த்துக் கொள்வதற்காக முன்பின் தெரியாத பெண் ஒருவரையும் குழந்தையை பராமரித்துக்கொள்ள நியமித்துள்ளார்.

us woman kidnapped as baby reunited after 51 years

ஆனால் அல்டாவின் நம்பிக்கையை உடைத்து மகள் மெல்லிசாவை தூக்கிக் கொண்டு பணிபுரிந்து வந்த பெண்ணும் தப்பி ஓடி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் குழந்தையாக இருக்கும்போதே காணாமல் போன மெல்லிசாவை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு விளம்பரங்களையும் தொடர்ந்து அல்டா மற்றும் அவரது கணவர் ஆகியோர் கொடுத்து வந்துள்ளனர்.

us woman kidnapped as baby reunited after 51 years

அதேபோல பல ஆண்டுகளாக மகள் கிடைக்காத நிலையில் ஆண்டுதோறும் நவம்பர் 6 ஆம் தேதி மெல்லிசா பிறந்த தினத்தில், மகள் இல்லாமல் இருந்தாலும் அந்த பிறந்த நாளை கொண்டாடுவதை தவறாமல் அல்டா மற்றும் அவரது கணவர் செய்து வந்துள்ளனர். அப்படி ஒரு சூழலில் 2018 ஆம் ஆண்டு சமூக வலைத்தளம் அதிகம் பரவலாக இருந்த சமயத்தில் மெல்லிசாவை கண்டுபிடிப்போம் என பக்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார்கள். அப்படி அல்டா மற்றும் அவரது கணவர் மேற்கொண்ட முயற்சி வீண் போகவில்லை.

us woman kidnapped as baby reunited after 51 years

சமீபத்தில் ஃபோர்ட்வொர்த் பகுதியில் இருந்து சுமார் 1,100 மைல்கள் தொலைவில் உள்ள சார்ல்ஸ்டன் என்னும் பகுதியில் மெல்லிசா இருப்பதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அப்படி ஒரு சூழலில் மெல்லிசாவின் டிஎன்ஏ அவரது பிறந்த நாள் உள்ளிட்ட பல விஷயங்கள் ஒத்துப் போகவே, இதனைத் தொடர்ந்து 51 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது மகள் என்பது உறுதியான நிலையில், சமீபத்தில் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மெல்லிசாவை நேரில் பார்த்துள்ளார் அல்டா. அந்த சமயத்தில் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்த சம்பவம் பலரையும் உருக்கும் வகையில் இருந்தது.

us woman kidnapped as baby reunited after 51 years

முன்னதாக குழந்தையாக இருந்த மெல்லிசாவை தாயார் தான் ஏதோ செய்து விட்டார் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த ஒரு சூழலில் தற்போது மகள் கிடைத்துள்ளதால் தாய் மீதான பழியும் நீங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | நண்பர்களுடன் பந்தயம்.. மண மேடையில் வைத்து முத்தம் கொடுத்த மாப்பிள்ளை??.. அடுத்த செகண்ட்டே மணப்பெண் எடுத்த பரபரப்பு முடிவு..!

Tags : #USA #WOMAN #REUNITE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Us woman kidnapped as baby reunited after 51 years | World News.