"இது என்ன லஞ்சமா?..." பாத்தா 'திருநெல்வேலி அல்வா' மாதிரியே இருக்கே?... 'WHO-க்கு' நிதியை அள்ளி வழங்கிய 'சீனா...' 'நெருக்குதலிலிருந்து தப்பிக்க யுக்தியா?'
முகப்பு > செய்திகள் > உலகம்உலக சுகாதார அமைப்புக்கு சீனா, 15,200 கோடி நிதியை 2 ஆண்டுகளில் படிப்படியாக வழங்குவதாக அறிவித்துள்ளது. தன் மீதான குற்றச்சாட்டில் உலக சுகாதார அமைப்பு தனக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்பதற்காக இவ்வளவு பெரிய நிதியை சீனா அள்ளி வழங்கி உள்ளதாக நிபுணர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின், 73வது உலக சுகாதார மாநாடு ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. இதில், சர்வதேச அளவில் கொரோனா தொற்று ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு நிலையான, தன்னிச்சையான, விரிவான மதிப்பீடு செய்ய வலியுறுத்தி ஐரோப்பிய யூனியன் வரைவு தீர்மானம் இயற்றியுள்ளது. இதற்கு ஆஸ்திரேலியா, வங்கதேசம், பூடான், இந்தோனேசியா, ஜப்பான், ஜோர்டான், மலேசியா, மாலத்தீவுகள், நார்வே, ரஷ்யா, இங்கிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சீனாவில் இருந்துதான் கொரோனா பரவியது என்று, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, அதற்கான நிதியுதவியையும் அமெரிக்கா நிறுத்தியது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்புக்கு சீனா, 15,200 கோடி நிதியை 2 ஆண்டுகளில் படிப்படியாக வழங்குவதாக அறிவித்துள்ளது. தன் மீதான குற்றச்சாட்டில் உலக சுகாதார அமைப்பு தனக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்பதற்காக இவ்வளவு பெரிய நிதியை சீனா அள்ளி வழங்கி உள்ளதாக நிபுணர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
