சீனாவின் 'பீகிங்' மரபியல் 'ஆய்வுத்துறை' சார்பில் 'மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிப்பு...' '5 நாட்களில்' கட்டுப்படுத்துவதாக 'விளக்கம்...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் மருந்தை தயாரித்துள்ளதாக சீன ஆய்வகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்க பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், சீனாவின் புகழ்பெற்ற பீகிங் பல்கலைக்கழக மரபியல் ஆய்வுத்துறை சார்பில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிப்பதன் மூலம் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விரைவில் குணமடைவதுடன், வைரசுக்கு எதிராக அவை மீண்டும் தொற்றாத வகையில் குறுகிய கால நோய் எதிர்ப்பு திறனையும் அளிப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதித்த எலியின் உடலில் இந்த மருந்தை செலுத்தியபோது 5 நாட்களில் வைரசின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்ததாகவும், இந்த ஆண்டு இறுதியில் இந்த மருந்து தயாராகி விடும் எனவும் சீன பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.