'8 மாதங்களுக்கு' முன்பே 'கொரோனா' உருவானது... மேலும் பல 'வைரஸ்கள்' உருவாக 'வாய்ப்புள்ளது...' 'ஸ்பெயின்' விஞ்ஞானிகள் பரபரப்பு 'தகவல்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 20, 2020 07:51 AM

சீனாவில், கொரோனா வைரஸ் எட்டு மாதங்களுக்கு முன்பே உருவாகி, அறிகுறி ஏதுமின்றி அமைதியாக இருந்திருக்கலாம் என, விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Spanish scientists say the corona was formed about 8 months ago

கடந்த ஆண்டு, டிசம்பரில், சீனாவின் வூஹான் நகரில், முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இந்த வைரஸ், கடந்த வருடம் அக்டோபர் மாதத்திலேயே, வூஹான் மக்களிடம் அமைதியாக பரவ ஆரம்பித்திருக்கலாம் என, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து, இக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு, அக்டோபர்-நவம்பர் மாதங்களில், வவ்வால்களிடம் தோன்றி பரவ ஆரம்பித்திருக்கலாம். தொடர்ந்து மற்ற பிராணிகளிடமும் பரவி அசைவ உணவு மூலமாக சீன  மக்களிடம் பரவியிருக்கலாம்.

இந்த வகையில், அறிகுறியின்றி அமைதியாக பரவிய கொரோனா, டிசம்பரில், திருவிழா காலத்தில் அதிக மக்கள் கூடிய போது, வேகமாக பரவி, பாதிப்பை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, வூஹான் நகரில், சீனாவின் புத்தாண்டுக் கொண்டாட்டம், குடும்ப விருந்து என்ற இரு பெரிய விழாக்களும், அவற்றில் மக்கள் அதிக அளவில் கூடியதும், கொரோனா பரவ முக்கிய காரணம் இருந்திருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், வைரஸ் பாதித்த முதல் மனிதர் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், முதல் வைரஸ் ஆய்வுக் கூடங்களிலிருந்து கூட பரவியிருக்கலாம், கிராமப்புற பண்ணைகளில் பரவ ஆரம்பித்திருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி, கொரோனா வைரஸ் போல, மேலும் பல வைரஸ்கள் தோன்றி, பரவ வாய்ப்புள்ளது என்றும் அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.