'வியாபாரம் பண்ணதெல்லாம் போதும்... சீக்கிரம் இடத்த காலி பண்ணுங்க'.. 'நம்ம ஊருக்கு போகலாம்!'.. அவசர அவசரமாக அமெரிக்காவில் மசோதா தாக்கல்!.. சீனாவில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை திரும்ப கொண்டுவர அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் விவகாரத்தால், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்துள்ளது. கொரோனாவால் வீழ்ச்சி அடைந்த அமெரிக்க பொருளாதாரத்தை நிமிர்த்த சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை அழைத்து வர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 'அமெரிக்க நிறுவனங்களை தாயகம் கொண்டுவரும் மசோதா' என்ற மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் மார்க் கிரீன் என்ற செல்வாக்கு மிகுந்த எம்.பி. தாக்கல் செய்தார்.
மசோதாவில், மார்க் கிரீன் கூறியிருப்பதாவது:-
அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க முதலீடுகளை ஈர்ப்பது அவசியம். ஆனால், அமெரிக்க நிறுவனங்கள், சீனாவில் இருந்து இடம்பெயருவதற்கு செலவுதான் முட்டுக்கட்டையாக இருக்கிறது. சர்வதேச ரீதியாக, பொருளாதார நிச்சயமற்ற நிலைமையால், நாடு விட்டு நாடு செல்வது அதிக ஆபத்தும், அதிக செலவும் நிறைந்தது என்பதுதான் நிறைய நிறுவனங்களுக்கு தயக்கமாக இருக்கிறது.
சீனா, நம்பகத்தன்மையற்ற கூட்டாளி என்று நிரூபித்து விட்டது. எனவே, அமெரிக்கா மீண்டும் வளர்வதற்கும், சீனாவை சார்ந்து இருப்பதை தவிர்ப்பதற்கும் வாய்ப்புகளுக்கு கதவை திறந்து வைப்பது நல்லது. சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் இடம்பெயர்வதற்கான செலவுகளுக்காக ஊக்கத்தொகை அளிப்போம். எனது மசோதா, வளர்ச்சிக்கு ஏற்றது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
