‘ஐபிஎல்-ன் ஒரே இந்திய பயிற்சியாளராக’.. ‘பிரபல முன்னாள் வீரர் தேர்வு’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Oct 11, 2019 05:44 PM
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரபல முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் கிரிக்கெட் தொடர்பான அனைத்து விஷயங்களையும் அவரே கவனித்துக் கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் அணிகளில் ஒரே ஒரு இந்தியப் பயிற்சியாளராகி உள்ளார் அனில் கும்ப்ளே.
மேலும் அஸ்வின் டெல்லி அணிக்குச் செல்கிறாரா அல்லது கிங்ஸ் லெவன் அணியிலேயே தொடர்கிறாரா என்பது அனில் கும்ப்ளே முடிவுக்கே விடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினை புறக்கணிப்பது பற்றிப் பேசிய அவர், “இன்னமும் இந்தியாவின் சிறந்த ஸ்பின்னர் அஸ்வின்தான்” எனக் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
Tags : #IPL #KINGSXIPUNJAB #ANILKUMBLE #RASHWIN #COACH #INDIAN
