'வேலைக்கு' செல்ல மறந்து... 11 மணிவரை 'தூங்கிய' வாலிபர் .. 10 நாட்கள் 'ஜெயில்' தண்டனை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Oct 07, 2019 04:25 PM

இருப்பதிலேயே பெரிய கஷ்டம் தூக்கத்தை தியாகம் செய்து ஆபிஸ் கிளம்புவது தான். எப்படியோ ஒருவழியாக கண்ணைத் திறந்து ஆபிஸ் செல்லும் துயரத்தை நாம் எல்லோருமே வாழ்க்கையில் அனுபவித்து இருப்போம்.

man sentenced to 10 days in jail after he overslept for jury duty

நிலைமை இப்படி இருக்க 9 மணி வேலைக்கு 11 மணிக்கு சென்ற வாலிபர் ஒருவருக்கு 10 நாட்கள் ஜெயில் தண்டனையும், 150 மணி நேரங்கள் சமூக சேவையும் செய்ய வேண்டும் என்ற தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டீன்ட்ரி சோமர்விலே(21) என்னும் வாலிபர் அமெரிக்காவில் உள்ள கோர்ட் ஒன்றில் ஜூரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் ஒருநாள் சற்று கண்ணயர்ந்து விட்டதால் 9 மணிக்கு செல்ல வேண்டிய கோர்ட்டுக்கு 11 மணிக்கு சென்றுள்ளார்.

நீபதி கேட்டதற்கு தான் தூங்கியதால் பணிக்கு தாமதமாக வந்ததாக தெரிவித்து இருக்கிறார். தனக்கு அபராதம் விதிக்கப்படும் என டீன்ட்ரி நினைத்திருக்க, கோபமடைந்த நீதிபதி 10 நாட்கள் சிறைத்தண்டனையும் 150 மணி நேரம் சமூக சேவையும் செய்ய வேண்டும் என தண்டனை வழங்கி விட்டார். தற்போது இந்த தண்டனை விவரம்  சமூக  வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

Tags : #AMERICA