4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை... அதி தீவிர 'கனமழை பெய்ய வாய்ப்பு'... சென்னை வானிலை மையம் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 21, 2019 11:45 AM

வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளநிலையில், தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

heavy rain red alert in 4 districts in chennai imd tn

அரபிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் கன மழையும், மிக அதிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

அதிலும் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய 4 மாவட்டங்களில், மிக அதிக கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை 4 மாவட்டங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பொருந்தாது.

ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இந்த 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், 21 சென்டி மீட்டர் அல்லது அதற்கும் அதிக மழை பெய்ய வாய்ப்யுள்ளது. மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூரில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைபெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags : #CHENNAI #RAIN #REDALERT #WARNING #TN