‘பிரபல கால்பந்து வீராங்கனையிடம்’.. ‘செல்ஃபி எடுக்கும்போது அத்துமீறி’.. ‘ரசிகர் செய்த அதிர்ச்சிக் காரியம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Oct 10, 2019 06:11 PM

பிரபல கால்பந்து வீராங்கனை ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும்போது ஒருவர் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Football fan banned for life after groping female player

மெக்சிகோவில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் மெக்சிகன் டைகர்ஸ் சாம்பியன் அணியும், அமெரிக்க ஹூஸ்டன் டேஸ் அணியும் நட்பு ரீதியாக மோதியுள்ளன. இந்தப் போட்டிக்குப் பிறகு மெக்சிகோ வீராங்கனை சோபியா ஹூர்டா ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது எல்லை மீறிய ஒரு நபர் அவருடைய மார்பின்மீது கை வைத்துள்ளார்.

இதைப் பிரச்சனையாக்க வேண்டாமென நினைத்த சோபியா ஹூர்டா சிரித்த முகத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால் பின்னர் சக வீராங்கனைகளிடம் நடந்ததைக் கூறி அவர் வருத்தப்பட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அந்த நபருக்கு கால்பந்தாட்ட நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த நபர் பற்றிய விவரம் தெரிந்தால் தங்கள் கிளப் விளையாடும் போட்டியைக் காண வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #FOOTBALL #FAN #FEMALE #PLAYER #SELFIE #BREAST #BAN #MEXICO #USA #SOFIAHUERTA