‘ஆமாம்! எங்களுக்குள் பிரச்சனை இருக்கு’... ‘ஒப்புக்கொண்ட இளவரசர்’... வருத்தத்தில் சகோதரர்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Sangeetha | Oct 22, 2019 01:03 PM
தானும், தனது சகோதரர் வில்லியமும், கருத்து வேறுபாடுடன், வெவ்வேறு பாதைகளில் பயணித்து கொண்டிருப்பதாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளது அரச குடும்பத்தை வருத்தமடைய செய்துள்ளது .

அமெரிக்க நடிகையான மேகன் மார்க்கிளை திருமணம் செய்தப்பின் இங்கிலாந்து இளவரசர் ஹாரி அண்மையில் தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ஐடிவி என்ற டாக்குமெண்ட்ரி சேனலுக்கு, பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியின் வீடியோ, கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகியிருந்தது. அதில் இளவரசர் ஹாரி சொல்லியிருந்த விஷயம், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில், தனது சகோதரர் வில்லியமுடன், தனக்கு கருத்து வேறுபாடு இருப்பதை ஒப்புக்கொண்ட ஹாரி, 'இருவரும் தற்போது வெவ்வேறு பாதைகளில் பயணிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் அவரவர் வேலைகளில் பரபரப்பாக இருப்பதால், ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள நேரம் கிடைப்பதில்லை. ஆனாலும் நாங்கள் இருவரும் சகோதரர்கள். எப்போதும் சகோதரர்களாகவே இருப்போம்.
எனது சகோதரர் மீது அதிக பாசம் வைத்துள்ளேன். அதேபோல், அவரும் என்மீது பாசம் வைத்துள்ளார். சகோதரர்களுக்கு இடையில் நல்ல நாட்களும் உண்டு, கெட்ட நாட்களும் உண்டு' என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த சம்பவத்தால், மூத்த சகோதரான இளவரசர் வில்லியம் வருத்தமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
