‘தந்தையின் நண்பர்களால்’... ‘5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்’... 'கதி கலங்கி துடிக்கும் பெற்றோர்'... ‘பொள்ளாச்சியில் நடந்த பரிதாபம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 16, 2019 03:44 PM

பொள்ளாச்சியில் நண்பரின் குழந்தையான 5 வயது சிறுமிக்கு, பாலியல் துன்புறுத்தல் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 year old child abused by her father\'s friends in pollachi

பொள்ளாச்சி அருகே செம்மேடு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் அங்குள்ள கோபாலபுரத்தைச் சேர்ந்த, தனது நண்பர்களான கார்த்தி (24) மற்றும் முருகன் ஆகியோருடன் சேர்ந்து, பல்வேறு இடங்களுக்குச் சென்று கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு, நண்பர்கள் மூவரும் சேர்ந்து ஆனைமலைப் பகுதியில் மது அருந்தியுள்ளனர். பின்னர், குமார் வீட்டுக்கு சென்ற அவர்கள், அங்கு இருந்த குமாரின் 5 வயது குழந்தையான சிறுமிக்கு, பிஸ்கெட் வாங்கி தருவதாக கூறி, தங்களது இருசக்கர வாகனத்தில், நண்பர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் 2 மணி நேரம் கழித்து குழந்தையை கொண்டுவந்து விட்டபோது, குழந்தையின் உடலில் ஆங்காங்கே ரத்தம் வந்ததைக் கண்டு, அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளிடம் இதுகுறித்து கேட்டனர். அப்போது தங்களது மகளுக்கு, நண்பர்கள்  இருவரும் சேர்ந்து பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர் கதறித்துடித்தனர். இதையடுத்து, ஊர்மக்கள் மற்றும் பெற்றோர் சேர்ந்து நண்பர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர்.

இதில் முருகன் தப்பியோடிவிட, கார்த்திக்கு அரிவாள் விட்டு விழுந்தது. வெட்டுக்காயம் அடைந்த கார்த்தி மற்றும் சிறுமியை மீட்டு பொதுமக்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி, 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார்த்தி மற்றும் முருகன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தப்பி ஓடிய முருகனை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ABUSED #CHILD #FRIEND #POLLACHI