'ஆபரேஷன் க்ளீன் மணியில் சிக்கிய சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்?'.. எவ்ளோனு தெரிஞ்சா ஆடிப்போவீங்க ஆடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 05, 2019 01:41 PM
பினாமி பரிவர்த்தனைகள் தடைச் சட்டத்தின் கீழ் சசிகலாவின் 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கியுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சொத்துக்கள் சசிகலாவால், 2016ஆம் ஆண்டு நவம்பர்8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு பிறகு கார் டிரைவர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட வீட்டுப் பணியாளர்களின் பெயர்களில் பினாமியாக வாங்கப்பட்டதாகவும், இவை, 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய 187 இடங்களில் நடந்த ஆப்பரேசன் கிளீன் மணி என்கிற வருமான வரி சோதனையின் போது கண்டறியப்பட்டதாகவும் தெரிகிறது.
சென்னை, புதுச்சேரி, கோவை ஆகிய இடங்களில், சசிகலாவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் 9 சொத்துகள் , சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால், புதுச்சேரியில் உள்ள ஒரு ரிசார்ட், கோவை செந்தில் பேப்பர்ஸ் அண்டு போர்ட்ஸ் உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த விபரங்கள் சசிகலா அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், எனினும் இவற்றை எதிர்த்து சசிகலா தரப்பு மேல் முறையீடு செய்வதற்கு 90 நாட்கள் கால அவகாசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.