'நடக்க போகும் கொடூரம் தெரியாமல் இளைஞர் எடுத்த செல்ஃபி வீடியோ'... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Apr 21, 2020 01:10 PM

காட்டில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரைச் சிறுத்தை தாக்கியுள்ள வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video : Leopard Attacks a man when he tried to take a selfie video

சமீப காலமாக காட்டு விலங்குகள் அதிகமாக ஊருக்குள் வரும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. அதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது, காட்டு விலங்குகள் செல்லும் பாதைகளை ஆக்கிரமிப்பது, மற்றும் காடுகளை அளிப்பது ஆகும். அவ்வாறு ஊருக்குள் வரும் காட்டு விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

இதற்கிடையே தற்போது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள வீடியோ, காட்டிற்குள் எடுக்கப்பட்டது போலத் தெரிகிறது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் சிறிய ஓடை போன்ற பகுதியில் நின்று கொண்டு, தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து கொண்டு இருக்கிறார். பின்னர் செல்ஃபி வீடியோ எடுத்துக் கொண்டு பேச ஆரம்பிக்கிறார். அப்போது தான் தனக்குப் பின்னால் இருக்கும் ஆபத்தை உணர்கிறார். சிறுத்தைப் புலி ஒன்று, அந்த இளைஞருக்குப் பின்னால் பதுங்கி இருக்கிறது.

இதனை அந்த இளைஞர் கவனிக்காமல் வீடியோ எடுத்துக் கொண்டு இருக்க, பின்னர் தான் சிறுத்தை இருப்பதைப் பார்க்கிறார். ஆனால் அதற்குப் பின்பு எதற்கும் நேரம் கொடுக்காமல், அந்த சிறுத்தை இளைஞரைத் தாக்குகிறது. அதற்குப் பின்பு அந்த இளைஞருக்கு என்ன ஆனது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால்  நிச்சயம் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என கருதப்படுகிறது. காண்போரின் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.