'நாட்டுல என்ன பிரச்சனை நடக்குது'...'சாலையில் இளம் பெண்கள் செஞ்ச செயல்'...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகம் உள்ளிட்ட 30 மாநிலங்களில் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்திவாசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் சிலர் ஊரடங்கு உத்தரவையும், கொரோனா எச்சரிக்கையையும் முழுமையாக கடைபிடிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருந்தார். பல இடங்களில் பொதுமக்கள் சாலையில் செல்வதையும் காண முடிந்தது. இதற்கிடையே 144 தடை உத்தரவை மீறி இளம் பெண்கள் இருவர் சாலையில் நின்று கொண்டு செல்ஃபி எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இரு இளம் பெண்களும் சாலையில் நின்று கொண்டு சாவகாசமாக செல்ஃபி எடுத்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது அங்கு ரோந்து வந்த காவல்துறை அதிகாரி அந்த பெண்ணை எச்சரித்து அனுப்புகிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இவ்வளவு ரணகளத்துலையும் உங்களுக்கு (செல்பி) கிளு கிளுப்பு கேட்க்குதோ ..இன்னும் . நல்லா நாளு போடுங்க சார் ..😂😂 pic.twitter.com/dbrICu191V
— ஆஹான்!! 😉 (@Kadhar_Twitz) March 25, 2020
