‘பிங்க் பால் டெஸ்ட்’.. ‘அசர வைத்த ரசிகர் கூட்டம்’.. இணையத்தை கலக்கும் 'தாதா' செல்ஃபி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Nov 24, 2019 03:42 PM

இந்தியா-வங்கதேசத்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட சவுரவ் கங்குலியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ganguly\'s selfie with Eden Gardens crowd rules the internet

இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதல்முறையாக பிங்க் நிற பந்தில் வீரர்கள் விளையாடினர். இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் கேப்டன் விராட் கோலி சதம் (136) அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் விளையாடிய வங்கதேச அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டின் போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். கங்குலி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றத்தில் இருந்து அணியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டுவந்து அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : #SOURAVGANGULY #BCCI #ICC #VIRATKOHLI #INDVBAN #PINKBALLTEST #TEAMINDIA #SELFIE